ஜெம் மருத்துவமனையின் ஹெர்னியா நுண்துளை அறுவை சிகிச்சை பற்றிய சர்வதேச கருத்தரங்கம்

ஜெம் மருத்துவமனையின் ஹெர்னியா நுண்துளை அறுவை சிகிச்சை பற்றிய சர்வதேச கருத்தரங்கம்

ஜெம் மருத்துவமனையின் ஹெர்னியா நுண்துளை அறுவை சிகிச்சை பற்றிய சர்வதேச கருத்தரங்கம்
MMAS எனப்படும் ஹெர்னியா அறுவை சிகிச்சையில் மேம்பட்ட ஃபெல்லோஷிப் துவக்கம்

AMASI ஹெர்னியா கூட்டமைப்பு உருவாக்கம்
டாக்டர்.சி.பழனிவேலு எழுதிய ஹெர்னியா பற்றிய புத்தகம் வெளியீடு

சென்னை, மார்ச் 15, 2024: லேப்ரோஸ்கோபிக் மற்றும் ரொபோடிக் அறுவை சிகிச்சைகளுக்கான இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான  ஜெம் மருத்துவமனை மற்றும் அசோசியேஷன் ஆஃப் மினிமல் ஆக்செஸ் சர்ஜியன்ஸ் ஆஃப் இந்தியா – AMASI சார்பில், ஹெர்னியா கார்னிவல் 2024 என்ற 2 நாள் “ஹெர்னியா நுண்துளை அறுவை சிகிச்சை” பற்றிய சர்வதேச கருத்தரங்கம் 15 மார்ச் 2024 முதல் 16 மார்ச் 2024 வரை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா-வில் நடைபெறுகிறது. ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு, அமாசி-யின் தலைவர் டாக்டர். சி.ஜே.வர்கீஸ், அமாசி-யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த தலைவர் டாக்டர். கல்பேஷ் ஜானி, அமாசி-யின் கெளரவ செயலர் டாக்டர் டெபோர்ஷி சர்மா ஆகியோர் உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் முன்னிலையில் இன்று மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

சர்வதேச அளவிலான 700-க்கும் மேற்பட்ட சிறப்பு நிபுணர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். பிரபல மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலகெங்கிலும் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவர்கள், தற்போதைய பிரதிநிதிகளுடன் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையிலிருந்து நேரடி அறுவை சிகிச்சைகள் மாநாட்டில் திரையிடப்ட்டது.

“லேப்ரோஸ்கோபிக் ஹெர்னியா சர்ஜரி” ௭ன்ற தலைப்பில் ஜெம் மருத்துவமனை தலைவர், மருத்துவர் சி.பழனிவேலு அவர்கள் ௭ழுதிய புத்தகத்தின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டது.

இது குறித்து பேசிய ஜெம் மருத்துவமனை தலைவர், மருத்துவர் சி.பழனிவேலு அவர்கள், “இந்த சர்வதேச கருத்தரங்கம் மூலம், ஹெர்னியாவுக்கான நுண்துளை அறுவை சிகிச்சைகள் குறித்து விவாதிக்க முடிந்தது. மேலும், இத்துறை சார்ந்த பல தகவல்களை பிற அறுவை சிகிச்சை நிபுணர்களோடும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. ஹெர்னியா சிகிச்சை சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடை காண இந்த கருத்தரங்கம் உதவியது”, என்றார்.

அவர் மேலும் கூறுகையில் “இந்த சர்வதேச மாநாட்டில், FMAS மற்றும் DMAS இன் மாபெரும் வெற்றிக்கு பின், MMAS எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சையில் மேம்பட்ட ஃபெல்லோஷிப்பை AMASI தொடங்கியுள்ளது. AMASI ஹெர்னியா கன்சோர்டியம் உருவாக்கப்பட்டது, இந்த மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சமாகும். நாடு முழுவதும் உள்ள குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறிவைப் பகிர்வதற்கும் மருத்துவ நடைமுறையில் சிறந்த தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த கூட்டமைப்பு செயல்படும்”, என்றார்.

Health