ரிபோஸ் மேட்ரஸ் – ஸ்மார்ட்கிரிட் மெத்தைகள் அறிமுகம்
ரிபோஸ் மெத்தைகள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் மெத்தை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. இதற்கு, கோவை, பூணா, மீரட் ஆகிய நகரங்களில் ஆலைகள் உள்ளன. 400 பணியாளர்களோடு, இந்தியா எங்கும் 1,500 விற்பனை முகவர்களோடு இயங்கி வரும் ரிபோஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு விற்றுமுதல் (டர்ன் ஓவர்) 103 கோடி ரூபாய் ஆகும்.
இது தொடர்பாக பேசிய ரிபோஸ் மெத்தைகள் நிறுவனத்தின் தலைமை விற்பனை அலுவலரான திரு. வி. பாலாஜி, “தற்போது தென் இந்திய சந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வரும் ரிபோஸ், வட இந்தியாவிலும் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காலூன்றி, 200 விற்பனை முகவர்களை நியமிப்பதே எங்களது நோக்கம். ஒடிஷாவின் புவனேஸ்வர் நகரத்தில் மற்றொரு உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். இந்த நிதியாண்டில் எங்கள் டர்ன் ஓவரை 200 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்துவதே எங்கள் இலக்கு. தமிழ்நாட்டில், எங்கள் விற்பனையை 30 கோடி ரூபாயில் இருந்து 60 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தற்போதுள்ள 400 முகவர்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

Uncategorized