ஏன்ஷியண்ட் சீக்ரெட்ஸ் 2022:
பழங்காலத்தை பாதுகாக்கும் கடந்த காலத்தின் மோகம்

சென்னை, 8 ஜூலை 2022: பிரின்ஸ் ஜூவல்லரியின் 22வது பதிப்பான ஏன்ஷியண்ட் சீக்ரெட்ஸ் ஆரம்பம். இந்திய பழங்கால நகைகளை கொண்டாடும் கண்காட்சி மற்றும் விற்பனையை சென்னையில் உள்ள அதன் கதீட்ரல் சாலை ஷோரூமில் தொடங்கியது. 1999 ஆம் ஆண்டு பிரின்ஸ் ஜூவல்லரியின் ஸ்பென்சர் பிளாசா ஷோரூம் முதன்முதலில் திறக்கப்பட்டதில் இருந்து கண்காட்சி மற்றும் விற்பனை நீண்ட பயணமாக வந்துள்ளது. இன்று, பண்டைய ரகசியங்கள் (ஏன்ஷியன்ட் சீக்ரெட்ஸ்) சிறியவர்களையும் பெரியவர்களையும் ஷோரூம்களுக்கு ஈர்க்கிறது. மேலும் ஒரு காலத்தில் விரும்பப்பட்ட சில விண்டேஜ் நகைகளையும் அனுபவிக்க முடியும்.

ஏன்ஷியன்ட் சீக்ரெட்ஸ் 2022, கடந்த காலத்தின் தனித்துவமான, அரிய சேகரிப்புகளின் வரிசையை காட்சிப்படுத்தியுள்ளது. மேலும் செட்டிநாடு, கோழிக்கோடு மற்றும் திருவாங்கூர் பகுதிகளிலிருந்து நீண்ட காலமாக மறக்கப்பட்ட பண்டைய கால ஏராளமான ஆபரணங்களைப் பார்வையிடலாம். கடவுள், தெய்வங்கள், இயற்கை மற்றும் விலங்குகள் அனைத்தும் வடிவமைப்புக்கான உத்வேகத்தின் ஒரு பகுதியாக இருந்து போற்றுதலுக்குரிய கைவினைத்திறனை உருவாக்குகின்றன.

கோவிட் காரணமாக ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு, இந்த ஆண்டு, பிரின்ஸ் ஜூவல்லரி தனது கதீட்ரல் ரோடு ஷோரூமில் கண்காட்சியை நடத்துகிறது. பாரம்பரியமான மற்றும் பழமையான தோற்றத்தை கொடுக்க முந்தைய பதிப்புகளை காட்டிலும் கூடுதலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிங்கர் மற்றும் மோரிஸ் போன்ற 1950 மற்றும் 1960களின் விண்டேஜ் கிளாசிக் கார்கள், ஜாவாவின் புகழ்பெற்ற பைக் ஆகியவை நுழைவாயிலில் பார்வையாளர்களை வரவேற்கும். உள்புறம் பாரம்பரிய செட்டிநாட்டு பாணி வடிவமைப்புகளை வெளிப்படுத்தும். அந்த மனநிலை வயதானவர்களுக்கு ஏக்கத்தையும், இளைஞர்களுக்கு கடந்த காலத்தை உணரும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் என்பது உறுதி.

Uncategorized