மகாபலிபுரத்தில் எஃப்சி மெட்ராஸ் தொடங்கும்
உலகத்தரத்திலான தங்கும் வசதியுடன் கூடிய கால்பந்து அகாடமி

சென்னை: இந்தியா, மார்ச் 18, 2023: ஒரு புதுயுக கால் பந்தாட்ட அகாடமியான FC Madras (எஃப்சி மெட்ராஸ்), சென்னை அருகே மகாபலிபுரத்தில் (Mahabalipuram) உலகத்தரத்திலான கால் பந்தாட்ட அகாடமி ஒன்றை இன்று தொடங்கியிருக்கிறது. அகில இந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு (AIFF) மற்றும் ஆசிய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றால் குறித்துரைக்கப்பட்டவாறு FIFA தரநிலைகளுக்கு இணக்கமானதாக “ஹோம் ஆஃப் எஃப்சி மெட்ராஸ்” என்ற இவ்வளாகம், உருவாக்கப்பட்டிருக்கிறது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்வளாகத்தில் இரவு நேரத்திலும் ஜொலிக்கும் ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் விளையாடுவதற்கான கால்பந்தாட்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிழக்காசியாவின் முதல் ஹைபிரிட் மைதானம், உடல்வலுவை மேம்படுத்தி உடற்தகுதியைப் பேணுவதற்கான மையம், மருத்துவ சிகிச்சை மற்றும் காயங்களிலிருந்து மீண்டு குணமடைவதற்கான சிகிச்சை மையங்கள், சர்வதேச தரத்தில் ஒரு உள்ளரங்க ஃபுட்ஸ்சால் மைதானம், 6 லேன்கள் கொண்ட நீச்சல் குளம், நவீன சமையலறை மற்றும் உணவுக்கூடங்களுடன் கூடிய தங்கும் விடுதி, NIOS (திறந்த நிலை பள்ளி கல்விக்கான தேசிய நிறுவனம்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மாற்றுவழி கற்றல் மையம் ஆகியவை இவ்வளாகத்தில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு சிறப்பு வசதிகளுள் சிலவாகும்.

திரு. கிரிஷ் மாத்ருபூதம், நிறுவனர், எஃப்சி மெட்ராஸ் பேசுகையில், “மெட்ராஸிலிருந்து அடுத்த மெஸ்ஸியை (next Messi from Madras) கண்டறிவதே எமது கனவு. நமது நாட்டில் வெற்றிக்கனியைப் பெறுவதற்கு அனைத்து தகுதியும் உள்ள மிகத்திறமையான இளம் விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர். எனினும், அவர்களுக்குள்ளே மறைந்திருக்கும் உண்மையான ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு உகந்த உட்கட்டமைப்பு வசதி, சூழல் மற்றும் வாய்ப்பு தேவைப்படுகிறது. விளையாட்டுகளிலும் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும், அரசும் மற்றும் தனியார் துறையின் பெருநிறுவனங்களும் பெரிய அளவில் ஆர்வம் கொண்டிருப்பதைக் காண்பது ஊக்கமளிக்கிறது. இந்த புதிய எஃப்சி மெட்ராஸ் வளாகத்தை நேர்த்தியாக உருவாக்கி இப்போது அதனை திறந்திருப்பதன் மூலம் இதுபோன்ற அகாடமிகளை உருவாக்க பிற பிசினஸ் நிறுவனங்களுக்கும் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் உத்வேகம் அளிப்பதற்கு ஒரு முன்னேற்ற நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், பெரும் சாதனைகளை நிகழ்த்தும் நமது எதிர்கால சேம்பியன்களுக்கு இத்தகைய அகாடமிகள் அவசியமாக இருக்கின்றன.” என்று கூறினார்.

Uncategorized