எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் மற்றும் இன்டலெக்ட் இணைந்து ‘ டிசைன் த திங்கிங்’ – ஆசிரிய மேம்பாட்டுத் திட்ட பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் மற்றும் இன்டலெக்ட் இணைந்து ‘ டிசைன் த திங்கிங்’ – ஆசிரிய மேம்பாட்டுத் திட்ட பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது


சென்னை, ஜூலை 11, 2023:எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்களுக்கான ‘ டிசைன் த திங்கிங்’ என்னும் ஆசிரிய மேம்பாட்டுத் திட்ட பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் இன்டலெக்ட் உடன் இணைந்து எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் நடத்தியது.எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 165 பேராசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இது அவர்களுக்கு ‘மாஸ்டர் ட்ரெய்னர்’ என்னும் பதவியை வழங்குவதோடு, டிசைன் திங்கிங் மாணவர் சமூகத்துக்கு எடுத்துச் செல்வதற்கான அதிகாரத்தையும் அவர்களுக்கு அளிக்கிறது.
‘டிசைன் த திங்கிங்’ ஆசிரிய மேம்பாட்டுத் திட்டமானது, டிசைன் திங்கிங் கல்வியுடன் இணைத்து வழங்குவதோடு, கல்வி நிறுவனங்களில் கலாச்சார மாற்றத்தை பேராசிரியர்களிடம் இருந்து துவக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூட்டாண்மை பற்றி
கடந்த 2019–ம் ஆண்டு ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் அன்ட் இன்டலெக்ட் நிறுவனம் ‘டிசைன் த திங்கிங்’ என்னும் 3 நாள் ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தை 25 பேராசிரியர்களுக்காக நடத்தியது. இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தனது துறைகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் , டிசைன் திங்கிங் எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2020–ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. அன்று முதல் இன்று வரை 6 பேட்ஜ்களாக நடைபெற்ற இந்த திட்டத்தில் ஒவ்வொரு பேட்ஜிலும் 25 முதல் 30 பங்கேற்பாளர்கள் வீதம் இக்கல்வி நிறுவனத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 165 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஆசிரிய மேம்பாட்டு திட்டம்
இந்த திட்டம் பங்கேற்பாளர்களுக்கு , டிசைன் திங்கிங் கருத்தை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், பல்வேறு கருவிகள், கட்டமைப்புகள் மற்றும் வழிமுறைகளைப் பயன்படுத்தி மனிதனை மையமாகக் கொண்ட, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட சிக்கலைத் தீர்க்கும் அணுகுமுறையாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கியது – அவற்றில் கல்வி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட சில முக்கியமானவையும் உள்ளன.
இந்தத் திட்டத்தின் தனித்தன்மை என்னவென்றால், ‘டிசைன் த திங்கிங்’ மிக முக்கிய அம்சமான ‘மன வடிவமைப்பு’ மீது கவனம் செலுத்துவதாகும். ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் அணுகுமுறையைப் பொறுத்தவரை அது இரண்டு பகுதிகளாக உள்ளது. முதலாவது சிந்தனையை வடிவமைத்தல் – ஒரு வடிவமைப்பு சிந்தனையாளராக இருப்பதற்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் தனியுரிம அணுகுமுறை, பின்னர் “எல்லையற்ற சிந்தனை” மூலம் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதாகும். இது மனநிலை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது பகுதி அதன் தனித்துவமான வடிவமைப்பு சிந்தனை செயல்முறை மற்றும் தொடர்புடைய கருவிகள் மற்றும் நடைமுறைகள் பற்றியதாகும்.
இந்த திட்டத்தில் தற்போது 165 பேராசிரியர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். தற்போது அவர்கள் ‘டிசைன் த திங்கிங்’ முதுகலை பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பி.டெக் மற்றும் எம்.டெக் படிக்கும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு சிறந்த பாடத்திட்டத்தை வழங்குவார்கள். இதை முன்னோக்கி எடுத்துச் செல்வதன் மூலம், மாணவர்களிடையே அனைத்து வாய்ப்புகளையும் சவால்களையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் திறன், திறமை மற்றும் கவனம் ஆகியவற்றை மேம்படுத்தி, சரியான தீர்வுகளைக் கண்டறிந்து அதை வாழ்க்கை முறையாக மாற்றுவதற்கான வடிவமைப்பு சிந்தனையை பேராசிரியர்கள் வழங்குவார்கள். அதேசமயம், இந்த திட்டமானது ஆசிரியர்களின் வாழ்க்கையில் வடிவமைப்பு சிந்தனையை மேம்படுத்தவும் உதவுகிறது. பாடத்திட்டம் மற்றும் கல்வியியல் வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்தத் திட்டம் ஆசிரியர்களை மறுபரிசீலனை செய்வதற்கும், அதன் விளைவாக, பல்வேறு பாடங்களை வடிவமைத்து மாணவர்களுக்குக் கற்பிக்கும் விதத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் உதவுகிறது. கற்பித்தல் மற்றும் கற்றல் ஆகிய இரு கண்ணோட்டங்களிலிருந்தும் கல்வியை மேம்படுத்த வடிவமைப்பு சிந்தனைக்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது.
இது குறித்து இன்டலக்ட் டிசைன் அரேனா, தலைவர், மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் மற்றும் ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் நிறுவனர் அருண் ஜெயின் கூறுகையில், டிசைன் திங்கிங் என்பது புதிய தீர்வுகளை வடிவமைக்க அல்லது பல களங்களில் உள்ள சமூக பிரச்சனைகளை தீர்க்க ஒருவரின் அணுகுமுறையில் ஆழமான வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. தற்போது சான்றளிக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் மூலம் மாணவர்களின் சிந்தனையில் பெரியதொரு மாற்றத்தை கொண்டுவர நாங்கள் எஸ்ஆர்எம் உடன் இணைந்து இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாட்டிலேயே முதன்முறையாக, உலகளாவிய கல்வித் தரத்திற்கு இணையான ஒரு பணியை ஒரு முதன்மை கல்வி நிறுவனமான எஸ்ஆர்எம் துவக்கி உள்ளது என்று தெரிவித்தார்.
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தர் முத்தமிழ்ச்செல்வன் கூறுகையில், இதுபோன்ற முன் முயற்சிகளை பொறுத்தவரை அரசு, தொழில் மற்றும் பிற நிறுவனங்களைக் காட்டிலும் நாங்கள் முன்னோடியாக இருக்கிறோம். கல்வியாளர்கள் என்பதையும் கடந்து அதற்கு அப்பாலும், நமது தேசத்தையும் சமூகத்தில் பல்வேறு பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். டிசைன் திங்கிங், நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையாக, சமூகப் பிரச்சினைகளில் பணியாற்றுவதற்கான நமது அணுகுமுறைக்கு உதவும் ஒரு ஊக்க சக்தியாக இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் மூலம், எங்கள் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தி, மாணவர்களின் வாழ்க்கையில் பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் இணை நிறுவனரும், தலைவருமான டாக்டர் அன்பு ரத்தினவேல் கூறுகையில், டிசைன் திங்கிங் குறிப்பாக என்பது கற்பித்தல் மற்றும் கற்றல் அரங்கில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மனநிலை மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக, வடிவமைப்பு சிந்தனையை கற்பித்தலாக

கொண்டு வருவதற்கான புதிய அணுகுமுறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பாடத்திட்டங்களை தாண்டி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உள்ளார்ந்த திறனை ஆராய்வதற்கும், கற்றல் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், எங்களின் வடிவமைப்பு சிந்தனை திட்டத்தை எஸ்ஆர்எம் ஏற்றுக் கொண்டிருப்பது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த திட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தர் முத்தமிழ்ச்செல்வன், இன்டலக்ட் டிசைன் அரேனா தலைமை நிர்வாக இயக்குனர் மற்றும் ஸ்கூல் ஆப் டிசைன் திங்கிங் நிறுவனர் அருண் ஜெயின் ஆகியோர் பட்டங்களை வழங்கினார்கள். விழாவில் மாணவர்களின் வடிவமைப்பு சிந்தனையைப் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் ‘ஆசிரியத் தத்தெடுப்பு கையேடு’ மற்றும் ‘மாணவர்களின் பணிப்புத்தகம்’ ஆகியவை வெளியிடப்பட்டன. இந்த வெளியீடுகள் அனைத்து துறைகளிலும் உள்ள மாணவர்களுக்கு வடிவமைப்பு சிந்தனையின் மகத்தான பயிற்சிக்கான வழிமுறைகளை கொண்டுவரும்.

Education Uncategorized