சுமங்கலா ஸ்காலர்ஷிப்உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர்!

சுமங்கலா ஸ்காலர்ஷிப்உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர்!

சென்னை, 7 அக்டோபர் 2023 : 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுமங்கலா ஸ்டீல்ஸ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இயங்கும் முன்னோடி ஸ்டீல் நிறுவனங்களில் ஒன்றானது என்பதுடன் கடந்த 35 ஆண்டுகளாக தொழில்நுட்பத்தில் முதன்மையான இடத்தில் திகழ்ந்து வரும் ஒரு நிறுவனமுமாகும்.  இன்று, கட்டுமானத்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் TMT கம்பிகளை தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனமான சுமங்கலா ஸ்டீல்ஸ் ‘உங்கள் குழந்தையும் ஆகலாம் இன்ஜினியர்’ என்ற உதவித்தொகை திட்டத்தை நிறுவியுள்ளதன்  மூலம் சமுதாயத்திற்கு அதன் பங்களிப்பினை நன்றியுடன் திருப்பியளிக்க உள்ளது.  கட்டுமானத்துறையில் உள்ள பணியாளர்கள் மற்றும் ஸ்டீல் டீலர்கள் ஆகியோரின் அனைத்து குழந்தைகளும் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு தகுதியானவர்கள்.

இந்த முன்முயற்சிக்கு பின்புலமாக உள்ள காரணம்

கட்டுமானத்துறையில் உள்ள ஒவ்வொரு பணியாளரும் மற்றும் ஸ்டீல் டீலர்ஷிப் நிறுவனங்களில் உள்ள ஊழியர்களும் தகுதிவாய்ந்த பொறியாளர்களின் கீழ் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். அவர்கள் பணியாற்றும் இத்துறையில் உள்ள இன்ஜினியர்கள் போலவே தங்கள் குழந்தைகளும் சிறந்த இன்ஜினியர்களாக வரவேண்டும் என அவர்கள் விரும்புவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஸ்டீல் பற்றிய மிகச்சிறந்த புரிதலுடன் செயல்படும் சுமங்கலா உயர் தரத்திலான TMT கம்பிகளை தயாரித்தளித்து கட்டுமான பணியாளர்களின் வாழ்வை மிகவும் எளிதாக்கியுள்ளதோடு பல ஆண்டுகளாக அவர்களது பணியிடத்தில் அவர்கள் உழைப்பிற்கு ஒரு நல்ல பெயரையும் பெற்று தந்துள்ளது. இந்த பணியாளர்கள் இதற்கு கைமாறாக  சுமங்கலா ஸ்டீலுக்கு அவர்களது நம்பிக்கையை அளித்து, தங்களது கட்டுமானத்துறையில் தன்னம்பிக்கையுடன் இதனை பயன்படுத்தி தங்கள் நன்றியறிதலையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் சுமங்கலா ஸ்காலர்ஷிப் திட்டத்தின் மூலம் இந்நிறுவனம் மேலும் பெரிய அளவில் அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவுவதோடு அவர்கள் குழந்தைகளின் கனவுகள் நனவாகவும் ஆதரவு அளிக்க உள்ளது.

சுமங்கலா ஸ்டீலின் தலைவர், திரு.ராஜேந்திரன் சபாநாயகம் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது,’ தேர்ந்தெடுக்கப்பட்ட 18 மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும்  நாங்கள் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்களையும்,  அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர்கள் படிப்பிற்கு உறுதுணையான ஆதரவையும் அளித்துள்ள விதத்தில் இன்றைய தினம், எங்களுக்கு மிகவும் பெருமையை சேர்த்த தினமாக அமைகிறது. கட்டுமானத்துறை பணியாளர்கள் மற்றும் ஸ்டீல் டீலர்களின் ஊழியர்கள் ஆகியோரின் குழந்தைகள் இந்த ஸ்காலர்ஷிப் தொகையை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து எதிர்நோக்கி இருக்கலாம் என உறுதியாக நம்புகிறோம்’ என்றார்.

Education Uncategorized