ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி கோவையில் நன்றி தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி கோவையில் நன்றி தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறை வளர்ச்சிக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி கோவையில் நன்றி தெரிவித்துள்ளார்..

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ஆறாவது தேசிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ஆ.ஹென்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தார்.விமான நிலையம் வந்த அவருக்கு, கூட்டமைப்பின் தேசிய துணைத் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் கூட்டமைப்பினர் மெடிக்கல் நாராயணன்,தலைமை நிலைய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,ஜெயம் லேண்ட் புரோமோட்டர் கண்ணன், வினோத் சிங் ரத்தோர்,சம்சுதீன்,வடக்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார்,பிரபாகர், பாலசுப்ரமணி,கார்த்திக்மோகன்ராஜ்,ஐயப்பன்,பாலா, செல்வராஜ் உள்ளிட்ட பலர்,உற்சாக வரவேற்பு அளித்தனர்…தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஃபெயிரா கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆ.ஹென்றி பேசினார்.அப்போது அவர், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவிடும் வகையில் மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி, நில வகைபாடு மாற்றம் போன்றவற்றை ஒற்றை சாளர முறையில் விரைவாக வழங்கும் வகையில் கட்டமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அனுமதி பெறுவதில் இருக்கின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சென்னையைப் போன்று கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, சேலம் மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களுக்கு பெருநகர வளர்ச்சி குழுமம் உருவாக்கி நடைமுறைப்படுத்தியமைக்கும் மேலும்,மாவட்ட அளவில் செயல்படும் டிடிசிபி அலுவலகங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகார வரம்பை கிராமப்புறங்களில் 5 ஏக்கர் வரை என்று இருந்த அதிகார வரம்பை பத்து ஏக்கர் வரை என உயர்த்தியும், நகர்ப்புறங்களில் 2.5 ஏக்கர் வரை இருந்த அதிகார வரம்பை 5 ஏக்கர் வரையிலும், கட்டிட திட்ட அனுமதி வழங்கும் அதிகார வரம்பை 15 ஆயிரம் சதுர அடியில் இருந்து 40 ஆயிரம் சதுர அடி வரைக்கும் உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சர் முத்துசாமிக்கும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்…தொடர்ந்து பேசிய அவர்,தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் 2017 முதல் 2021 வரை 3066 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு 2022 இல் மட்டும் மே மாதம் இறுதிவரை 4548 திட்டங்கள் அதாவது நாள் ஒன்றுக்கு வேலை நாட்கள் கணக்கில் 41 விண்ணப்பத்தின் மீது திட்டங்கள் பதிவு செய்து தீர்வு ஏற்பட்டுள்ளதாக கூறினார்..மேலும் இதி போன்று ரியல் எஸ்டேட் துறை சார்ந்த தொழில் வளரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை தற்போதைய அரசு வெளியட்டுள்ளதாக கூறிய அவர்,தற்போது,விண்ணை முட்டும் அளவிற்கு தற்போது உயர்ந்துள்ள கட்டுமான பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணத்தை வெகுவாக குறைக்க வேண்டும்.மாவட்ட அளவில் செயல்படும் டிடிசிபி அலுவலகங்களுக்கு நிரந்தர அலுவலர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன் வைத்தார்.

District News