கல்யாணமாலை, திருமண சேவை துறையில் 22 வருட அனுபவம் கொண்ட நிறுவனம், உயர் மதிப்புமிக்க இரண்டு நாள் பிரீமியம் திருமண எக்ஸ்போ – “வெட்டிங் & பியாண்ட்” (Wedding  & Beyond), ஜூலை 2 மற்றும் 3 ஆம் தேதி, சென்னை வர்த்தக மையத்தில் நடத்தவுள்ளது

கல்யாணமாலை, திருமண சேவை துறையில் 22 வருட அனுபவம் கொண்ட நிறுவனம், உயர் மதிப்புமிக்க இரண்டு நாள் பிரீமியம் திருமண எக்ஸ்போ – “வெட்டிங் & பியாண்ட்” (Wedding  & Beyond), ஜூலை 2 மற்றும் 3 ஆம் தேதி, சென்னை வர்த்தக மையத்தில் நடத்தவுள்ளது

20,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்ளும்  “வெட்டிங் & பியாண்ட்” – சென்னையில் ஜூலை 2 – 3 தேதிகளில் கல்யாணமலை யின் பிரம்மாண்ட கண்காட்சி

தொற்று காலத்திற்கு பிறகு மீண்டு வரும் திருமண துறை, “பிக் ஃபேட்” இந்தியன் திருமணத்துடன் மீண்டும் மீண்டு வருகிறது

சென்னை 24 ஜூன் 2022 – கல்யாணமாலை, திருமண சேவை துறையில் 22 வருட அனுபவம் கொண்ட நிறுவனம், உயர் மதிப்புமிக்க இரண்டு நாள் பிரீமியம் திருமண எக்ஸ்போ – “வெட்டிங் & பியாண்ட்” (Wedding  & Beyond), ஜூலை 2 மற்றும் 3 ஆம் தேதி, சென்னை வர்த்தக மையத்தில் நடத்தவுள்ளது. சர்வதேச அனுபவத்துடன் இந்திய குடும்பங்களின் திருமண மற்றும் வாழ்க்கை முறை தேவைகளை நிறைவேற்றும் மாபெரும் மதிப்புமிக்க பிராண்ட்களை அணி சேர்க்க உள்ளது. 

இரண்டு நாள் நடைபெறும், எக்ஸ்போ வரும் ஜூலை 1 ஆம் தேதி, மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு, மற்றும் மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர், தமிழ்நாடு அரசு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார்கள். திரு. டி.வி. மோகன் மற்றும் திருமதி மீரா நாகராஜன், எம்டி & சிஇஓ, கல்யாணமலை முன்னிலை வகிக்கிறார்கள். துவக்க விழாவில் முன்னணி தொழில் நிறுவன தலைவர்கள் பங்கு பெற உள்ளனர்.

இந்த திருமண கண்காட்சியில் 20,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் திருமணம் குறித்த அனைத்து தகவல்கள், புரிதல்கள் மற்றும் அதற்கான முன்பதிவும் செய்யலாம். மேலும் எக்ஸ்போவில் 200 க்கும் மேற்பட்ட விற்பனை காட்சியரங்கு, துமானத்திற்கு முந்தைய, திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிந்தைய பொருட்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான 30 பிரிவுகளின் கீழ் 6160 ச.மீ பரப்பளவில் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அதிநவீன திருமண ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும். 

எக்ஸ்போவில், 300க்கும் மேற்பட்ட பிராண்ட்கள்ஸ்டால்கள், திருமணத்திற்கு முந்தைய, திருமணம் மற்றும் திருமணத்திற்குப் பிந்தைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான 50 பிரிவுகளின் கீழ் 6160 சதுர மீட்டர் பரப்பளவில் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அதிநவீன திருமண ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும்.

பார்வையாளர்கள் ஜூலை 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் ஸ்டால்களைப் பார்வையிடவும் தங்கள் திருமண ஷாப்பிங்கை அனுபவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இந்திய திருமணத் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் நிபுணர்கள் மற்றும் பிராண்ட் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளலாம் மற்றும் கண்காட்சியாளரின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்கள் புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம் .

நிகழ்ச்சி குறித்து பேசிய “கல்யாணமாலை” திரு. டி.வி. மோகன் மற்றும் திருமதி மீரா நாகராஜன், எம்டி & சிஇஓ, கல்யாணமாலை, “அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்திய திருமணச் சந்தை $50 பில்லியன் மதிப்புடையது, , தொற்றுநோய் காலத்திற்கு பின் அதன் வேகத்தை மீண்டும் பெறுகிறது. திருமண செலவு முறைகளில் மாற்றங்கள் இருந்தாலும், திருமண வரவு செலவுத் திட்டத்தை அமைப்பதில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், பெரிய அளவில் செலவு செய்யவும் விரும்புகிறார்கள். “வெட்டிங் & பியாண்ட்”, திருமண எக்ஸ்போ பார்வையாளர்களுக்கு திருமணம் மற்றும் அதை நடத்துவதற்கான தகவல், முழுமையான புரிதலை மற்றும் விற்பனையை வழங்கும்.

வெட்டிங் & பியாண்ட்”, திருமண எக்ஸ்போவில் நேர்த்தியான திருமண நகைகள், மணப்பெண் மற்றும் மணமகன் ஆடைகள், பொழுதுபோக்கு மற்றும் நடன அமைப்பு, நிகழ்வு திட்டமிடுபவர்கள், அலங்காரங்கள் மற்றும் தீம், உணவு மற்றும் பானங்கள், இனிப்புகள் மற்றும் கார வகைகள், அழகுசாதனப் பொருட்கள், புகைப்படம் மற்றும் வீடியோ, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஒப்பனையாளர்கள் மற்றும் கலைஞர்கள், திருமண அழைப்பிதழ்கள் & வடிவமைப்புகள் இடம்பெறும்., தேன்நிலவு பேக்கேஜ்கள், வீட்டு உபயோக பொருட்கள் & வீட்டு வசதி பொருட்கள், வீடு, விருந்தினர் மேலாண்மை. ஆகியவை குறித்து அறிந்து கொள்வதுடன் முன்பதிவு செய்யலாம்.

எக்ஸ்போ நிகழ்ச்சிகள்

ஜூலை 2 ஆம் தேதி, எக்ஸ்போவின் முதல் நாள் “விவாஹா பிரார்த்தனை” உடன் தொடங்கும், இது வரன் தேடுபவர்களுக்கு தடைகள் வராமல் இருக்க குரு மித்ரே சிவன், ராஜேந்திரன் ஐஏஎஸ், திருமதி சுசித்ரா மற்றும் திரு இசைகவி ரமணன் ஆகியோரால் வழங்கப்படும் கூட்டு பிரார்த்தனை. மாலையில், “தென்னிந்தியாவின் மணமகள்” என்ற கருத்தியல் பேஷன் ஷோ, திருமதி பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் திருமதி சீதா உள்ளிட்ட பிரபலங்களின் முன்னிலையில் நடத்தப்படும்.

ஜூலை 3 ஆம் தேதி, எக்ஸ்போவின் இரண்டாம் நாள் வரன் தேடுபவர்கள் தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து உரையாடுவதற்கும் திருமணத்தை எளிதாக்குவதற்கும் “சமூக சந்திப்பு” நடைபெறும். மாலை அமர்வில் “குடும்ப நிதி நிலை மிகவும் வலிமை சேர்ப்பது: ஆண்களா – பெண்களை” என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் நடத்தும் “பட்டிமன்றம்” நிகழ்ச்சி நடைபெறும்.

நிறைவு பாராட்டு விழாவுக்கு, டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன். ஐஏஎஸ்முதன்மை செயலர்கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தமிழ்நாடு அரசு தலைமை வகித்து அனைத்து ஸ்பான்சர் களையும் கெளரவிப்பார்.

Launch