வடபழனி காவேரி மருத்துவமனை நடத்திய ‘நம்ம ஹார்ட் வாக்’ 

வடபழனி காவேரி மருத்துவமனை நடத்திய ‘நம்ம ஹார்ட் வாக்’ 

வடபழனி காவேரி மருத்துவமனை நடத்திய ‘நம்ம ஹார்ட் வாக்’ இதய நோயிலிருந்து மீண்டவர்களையும் அவர்களது மருத்துவர்களையும் சுதந்திர தினத்தன்று ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நடைப்பயணம்

சென்னை, 15 ஆகஸ்ட், 2025: உடல்நலத்தையும், சுதந்திரத்தையும் ஒருங்கே கொண்டாடும் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக, வடபழனி, காவேரி மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைகளுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்த நூற்றுக்கணக்கான இதய நோயாளிகள், 2025 ஆகஸ்ட் 15 – நம் நாட்டின் சுதந்திர தினத்தன்று அண்ணா நகர் டவர் பூங்காவில் தங்களுக்கு சிகிச்சை அளித்த இதயநோய் நிபுணர்களுடன் கைகோர்த்து நடைபயணத்தை மேற்கொண்டனர். 

இந்த “நம்ம ஹார்ட் வாக்” நடைப்பயணத்தை அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. M.K. மோகன் மற்றும் புகழ்பெற்ற இந்திய சமகால ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், மருத்துவமனையின் முதுநிலை இதயநோய் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் அன்பரசு மோகன்ராஜ் (கிளினிக்கல் லீடு & முதுநிலை நிபுணர்- இதயநாள & மார்பறை அறுவை சிகிச்சை), பேராசிரியர் டாக்டர் P. மனோகர் (கிளினிக்கல் லீடு – இடையீட்டு இதயவியல் சிகிச்சைப் பிரிவு) மற்றும் டாக்டர் C. சுந்தர் (கிளினிக்கல் லீடு – கட்டமைப்பு இதயவியல் பிரிவு) ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இந்த கொண்டாட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அண்ணா நகர் டவர் பார்க்-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தானியக்க திறன் கொண்ட (Automated External Defibrillator (AED)) சாதனத்தை தலைமை விருந்தினர் திரு. எம்.கே. மோகன் திறந்து வைத்தார். உயிர்காக்கும் இச்சாதனம், இதயச் செயலிழப்பு போன்ற அவசரநிலைகளின் போது பொதுமக்கள் அணுகிப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். திடீர் இதயச் செயலிழப்பு ஏற்படும் போது, அதனை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை பொது அமைவிடங்களில் உருவாக்க வேண்டும் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டுமென்று இம்மருத்துவமனை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதாக இந்த வசதியினை இம்மருத்துவமனை அறிமுகம் செய்துவருகிறது.

Health