சென்னை, செப்டம்பர் 20, 2025 – மெரிடியன் மருத்துவமனை, 300 படுக்கை வசதிகள் கொண்ட குவாட்டர்னரி பராமரிப்பு மையம், ஒரே இடத்தில் அனைத்து மருத்துவ சேவைகளையும் வழங்குவதில் புகழ்பெற்ற மருத்துவமனை இன்று தனது மெரிடியன் இதய அறிவியல் மையம் தொடங்கியது. இது வட சென்னையின் அமைந்துள்ள முதல் முழுநேர விரிவான இதய மருத்துவ பராமரிப்பு மையம் ஆகும்.
வடசென்னை பகுதியில் முழுமையான மருத்துவ சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் மெரிடியன் மருத்துவமனை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இது புற்றுநோய் சிகிச்சையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையை நிறுவிய முதல் மருத்துவமனை ஆகும். இதயவியல் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை முதல் மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல், இரைப்பை குடல், நரம்பியல், எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, பொது மருத்துவம் மற்றும் மகளிர் மருத்துவம் வரை முழு அளவிலான மருத்துவ சிகிச்சையை வட சென்னையில் வழங்கும் ஒரே மருத்துவமனையாக மெரிடியன் மருத்துவமனை திகழ்கிறது.
மெரிடியன் இதய அறிவியல் மையம் தொடங்கப்பட்டதன் மூலம் வடசென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பயன்பெறும் வகையில்,
# உலகத்தரம் வாய்ந்த, 24/7 இருதய கேத் ஆய்வகம் (Cath Lab) அதி நவீன தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
# இதய சிகிச்சைகளுக்கான எளிதான அணுகுமுறையுடன் சர்வதேச பயிற்சி பெற்ற இதய நோய் நிபுணர்கள் கொண்டு பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி, கரோனரி ஆஞ்சியோகிராபி, FFR, IVUS, OCT, அதெரெக்டமி, IVL, பேஸ்மேக்கர் இம்பிளான்டேஷன் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜி நடைமுறைகளை திறம்பட செயல் படுத்துகின்றனர்.
# சர்வதேச பயிற்சி மற்றும் அனுபவமுள்ள புகழ்பெற்ற இதயநோய் நிபுணர் டாக்டர் அஸ்வனி லதாவின் நிபுணத்துவம்
# 16,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரும் நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் மூசா குன்ஹியின் தலைமை.
# இந்தியாவில் பல முன்னோடி “முதல்முறை” அறுவை சிகிச்சைகளுக்காக பல பாராட்டடுகள் பெற்றவர், மேலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சைகளில் திறமையானவர்.
மெரிடியன் இதய அறிவியல் மையம், வட சென்னைக்கு பெருமளவில் மருத்துவ சிகிக்சை அளிக்கும், மேம்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் கொண்டு இருதய சிகிச்சை, முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற “கோல்டன் ஹவர்” அவசரகால சிகிச்சைகளை உடனடியாக வழங்குவதன் மூலம், மாரடைப்பு நோயாளிகளுக்கு உயிருக்கு ஆபத்தான நேரங்களில் நகரத்திற்கு சென்று சிகிச்சை பெரும் நேரத்தை வெகுவாக குறைக்கும். இந்த மையத்தின் சேவை வடசென்னை பகுதிகளுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளுக்கும் தனது சிறப்புப் பராமரிப்பை விரிவுபடுத்தி, மேம்பட்ட மருத்துவ பணி அளிக்கிறது

