உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ‘Dr. GEM’ AI++ கேன்சர் இன்டெலிஜென்ஸ் மற்றும் புற்றுநோயை கண்டரியும் திட்டங்களை அறிமுகப்படுத்திய ஜெம் மருத்துவமனை*

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ‘Dr. GEM’ AI++ கேன்சர் இன்டெலிஜென்ஸ் மற்றும் புற்றுநோயை கண்டரியும் திட்டங்களை அறிமுகப்படுத்திய ஜெம் மருத்துவமனை*

சென்னை, 3 பிப்ரவரி 2026:* உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் சிகிச்சை முன்னேற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை ஜெம் மருத்துவமனை மீண்டும் வலியுறுத்தியது. இதன் ஒரு பகுதியாக, புற்றுநோய்க்கான புதுமையான AI++ GEM Intelligence chatbot – ‘Dr.GEM’-ஐ அறிமுகப்படுத்தியதுடன், நோயாளிகளை மையமாகக் கொண்ட இரண்டு புதிய முயற்சிகளையும் தொடங்கியது.
ஓய்வூதியர்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை திட்டம் மற்றும் அனைத்து புற்றுநோய் நோயாளிகளுக்கும் இலவச இரண்டாம் கருத்து (Second Opinion) ஆலோசனை வழங்கும் திட்டம் ஆகிய இவ்விரண்டு திட்டங்களும் இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் (WIA), துணைத் தலைவர், பேராசிரியர் ஈ. ஹேமந்த் ராஜ் கலந்து கொண்டு, ஆரம்ப கட்ட கண்டறிதலின் முக்கியத்துவம் மற்றும் அது புற்றுநோய் நோயாளிகளின் உயிர்வாழ்தல் விகிதத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதில் அளிக்கும் நிரூபிக்கப்பட்ட பலன்களைப் பகிர்ந்தார். காலத்துக்கேற்ற பரிசோதனையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், விழிப்புணர்வும் ஆரம்பகால தலையீடும் புற்றுநோயை எதிர்கொள்ளும் போராட்டத்தில் மிகச் சிறந்த கருவிகளாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ரொட்டேரியன் பாலகிருஷ்ணன், தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமூக சேவை, தொழில்நுட்பம் மற்றும் கருணையுடன் கூடிய சிகிச்சையை ஒருங்கிணைத்து அதிகரித்து வரும் புற்றுநோய் சுமையை எதிர்கொள்ளும் ஜெம் மருத்துவமனையின் முயற்சிகளைப் பாராட்டினார்.

Dr.GEM என்பது ஜெம் மருத்துவமனையால் உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கான ஒரு செயர்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருள் ஆகும். இது நம்பகமான, ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்ட புற்றுநோய் தகவல்களை வழங்கவும், நோயாளி ஈடுபாட்டை மேம்படுத்தவும், மருத்துவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட, எளிதில் அணுகக்கூடிய மருத்துவக் கருத்துக்களை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்துக்கும் மனிதநேய சுகாதாரத்துக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இந்த தளம், மேம்பட்ட டிஜிட்டல் கருவிகளை கருணைமிக்க, நோயாளிகளை மையமாக கொண்ட சிகிச்சையுடன் ஒருங்கிணைக்கும் ஜெம் மருத்துவமனையின் பார்வையை பிரதிபலிக்கிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய *டாக்டர் சி. பழனிவேலு, நிறுவனர் மற்றும் தலைவர், ஜெம் மருத்துவமனைகள்*, “உலக புற்றுநோய் தினத்தில் எங்கள் கவனம் புதுமையில் மட்டுமல்ல; அணுகல்தன்மையும் நம்பிக்கையும் அதே அளவு முக்கியம். Dr.GEM அறிமுகத்தின் மூலம், நம்பகமான ஆதார அடிப்படையிலான தகவல்களை நோயாளிகளுக்கு வழங்குவதோடு, மருத்துவர்களுக்கு கட்டமைக்கப்பட்ட, எளிதில் அணுகக்கூடிய மருத்துவ நுண்ணறிவுகளுடன் உதவுவதாகும். அதே நேரத்தில், ஓய்வூதியர்களுக்கான இலவச பரிசோதனை திட்டமும், இலவச இரண்டாம் கருத்து ஆலோசனையும், தரமான புற்றுநோய் சிகிச்சை அனைவருக்கும் எட்டக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை வலியுறுத்துகின்றன,” என்றார்.

டாக்டர் பி.செந்தில்நாதன், இயக்குநர் – ஜெம் மருத்துவமனை, “புற்றுநோய் சிகிச்சை முடிவுகளை மேம்படுத்த ஆரம்பகால கண்டறிதலும் தெளிவான, தகவல் அடிப்படையிலான முடிவெடுப்பும் மிகவும் அவசியம். Dr.GEM மூலம் நோயாளிகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் புற்றுநோயை எளிதில் புரியவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல், எங்கள் புதிய திட்டங்கள் நிதி அல்லது தகவல் குறைபாடுகள் சிகிச்சையை தாமதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்கின்றன. கருணையால் வழிநடத்தப்படும் தொழில்நுட்பம், புற்றுநோய் சிகிச்சை பயணத்தை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றக்கூடும்,” என்று தெரிவித்தார்.

இந்த முயற்சிகள் மூலம், புதுமை, மருத்துவத் திறமை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நோயாளிகளின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் முழுமையான புற்றுநோய் சிகிச்சையில் முன்னணி நிறுவனமாக ஜெம் மருத்துவமனை தனது பங்கை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

Health