65 வயதான ராஹோத் பஸாரி என்ற இஸ்லாமிய பெண்மணியை ஏமாற்றி 1கோடி ரூபாய் ஏப்பம் விட்ட பாஜக பிரமுகரான வைரவேல் .
ஆவடியை சேர்ந்த 65 வயதான ராஹோத் பஸாரி இஸ்லாமிய பெண்மணி.
இவர் சென்சார் போர்டு உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் செயல் வீரங்கனையாகவும் இருந்திருக்கிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி தன்னை இணைத்துக் கொண்டு ஆவடி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டும் இருக்கிறார் . அப்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வைரவேல் என்ற இளைஞர் இவருக்கு கட்சி என்ற முறையில் பழக்கமாக இருக்கிறார் . ராஹோத் பஸாரியின் பணப்பறிமாற்ற நடவடிக்கை உற்று நோக்கி கவனித்த வைரவேல் ஒரு சதி திட்டம் தீட்டி அவரிடம் இருந்து பணத்தைப் பறிக்க வேண்டும் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். ராஹோத் பஸாரியிடம் வைரவேல் நல்லவரை போல் நடித்து நம்பிக்கையுடன் நடந்துகொண்டார்.
ரூபாய் 3 கோடி மதிப்புள்ள இடம் OMR -ல் உள்ளது, அது 3 கோடி ரூபாய் மதிப்புள்ளது,
முதலில் ஒரு கோடி கொடுத்தால் விற்க தயாராக உள்ளனர். பிறகு கூட ரூ.2 கோடியை கொடுக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி
கிருஷ்ணகிரி சேர்ந்த திருமால் முருகன் என்பவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி இருக்கிறார் .
இவருடைய மகன், மருமகள் இருவரும் அமெரிக்காவில் உள்ளனர். ஆகவே இந்த இடத்தை விற்றுவிடச் சொல்லியிருக்கிறார்கள்
என்று கூறியிருக்கின்றனர்.
இதையெல்லாம் நம்பிய ராஹோத் பஸாரி, வைரவேல் மேல் உள்ள நம்பிக்கையின் பேரில்
ரூ. 20 லட்சத்தை முன்பணமாக கொடுத்திருக்கிறார்.
பிறகு சிறிது சிறிதாக மொத்தம் 55 ரூபாய் லட்சம் வரை வங்கியின் மூலம் வைரவேல் கணக்கிற்கு மாற்றியிருக்கிறார்.
மீண்டும் ரூ 10 இலட்சம் வேண்டும் என்று கேட்டு ஒருமுறை அண்ணாநகர் மெக்டோனல்ட் ரெஸ்டாரண்டில் லாவண்யா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தி இவர் தான் அமெரிக்காவில் இருக்கும் திருமால் முருகன் மருமகள் என்று அறிமுகப்படுத்தினார்.
மீண்டும் ஒரு நாள் அதே பெண்ணை என் மனைவி என்று சொன்னார்.
அப்போதுதான் வைரவேல் ஏமாற்றுகாரன் புரிந்து கொண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது முதல் ராஹோத் பஸாரி திருமால் முருகனிடமிருந்து பணத்தை திருப்பி வாங்கி தரும்படி கேட்க அன்பாக பேசி கொண்டிருந்த வைரவேல் உடனே மிரட்ட ஆரம்பித்தார்.
அப்போது முதல் ராஹோத் பஸாரிக்கு கொலை மிரட்டல், ரவுடிகளை ஏவி மிரட்டுவதுமாக மன உளச்சலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். இதில் காவல்துறையும் புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில்
திருமால் முருகனும், வைரவேலும் மற்றும் இரண்டு குடும்பத்தாருமே இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு இருக்கிறார்கள் .
காவல்துறையும் திருமால் முருகனை காப்பாற்ற தான் செய்கிறார்களே தவிர அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முற்படவில்லை.
ராஹோத் பஸாரி வைரவேலுக்கும், திருமால் முருகனுக்கும் கொடுத்த பணத்திற்கு ஆதாரம் வைத்துள்ளார். ஆதாரத்தை அழிப்பதற்கு இவருக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் உள்ளது.
65 வயது பெண்மணிக்கு நீதி கிடைக்க வேண்டும். காவல் துறை நடவடிக்கை எடுக்குமா? நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்று உறுதியுன் இருக்கிறார் பாதிக்கப்பட்ட ராஹோத் பஸாரி.

