
சென்னை, குரோம்பேட்டையில் வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா குரோம்பேட்டையில் உள்ள வாஸன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த விழாவில் வாஸன் கண் மருத்துவமனையின் நிர்வாகிகள் மற்றும் தமிழக வணிகர் சம்மேளன
நிர்வாகிகள் கலந்து கொண்டார்.
தமிழக வணிகர் சம்மேளனத்தின் தலைவர் பி. தமிழ்செல்வம் தலைமையிலும்
வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி (COO) டாக்டர் கமல்பாபு முன்னிலையிலும் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் ,
தமிழ்நாடு வணிகர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஜீவானந்தம் பேசியபோது,
இங்கு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வணிகர் குடும்பங்களும் பயனடைவார்கள் என்றும் வாஸன் கண் மருத்துவமனையின் அதிநவீன மருத்துவ சேவைகள் அவர்களுக்கு சென்றடையும் என்றும் விரிவாக பேசினார் .
மேலும் தமிழ்நாடு வணிகர் சம்மேளனத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநில துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். வாஸன் கண் மருத்துவமனையின் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்

