ABVP -யின் தேசிய செயற்குழு கூட்டம் மற்றும் உறுப்பிவர சேர்க்கை தொடர்பாக
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் நாடு முழுவதும் பல்லேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது ஆண்டிக்கு 2 முறை நடை பெறும் தேசிய செயற்குழு கூட்டம் இந்தாண்டு கடந்த மே மாதம் 29 முதல் 31 வரை ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது மே 28ம் தேதி நடைப்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி அவர்கள் கலந்து கொண்டு பேசினார்
மே 29ம் தேதி துவங்கிய தேசிய செயற்குழு கூட்டத்தினை ABVP தேசிய தலைவர் ஸ்ரீ ராகு ராஜ் கிஷோர் திவாரி அவர்கள் மற்றும் தேசிய பொதுசெயலாளர் ஸ்ரீ விரேந்திர சிங் சோலங்கி மற்றும் தேசிய அமைப்பு செய்வாளர் ஸ்ரீ ஆஷிஷ் செளகான் ஆகியோர் வழிநடத்தினர். இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் நடைப்பெற்ற இயக்க பணிகள் குறிந்தும் கல்வி குழ்நிலைகள் குறித்தும் தேச பாதுகாப்பு குறித்தும் நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றது மேலும் வரும் கல்வியாண்டிற்கான முழுமையான திட்டமிடுதலும் நடைபெற்றது.

