சென்னையிலும் மற்றும் தமிழ்நாடெங்கிலும் முக்கிய அமைவிடங்களில் 100-க்கும் அதிகமான தானியக்க வெளியார்ந்த டீஃபைபிரிலேட்டர்கள் (உதறல் நீக்கி சாதனம்) நிறுவப்படவுள்ளன
· செம்மொழி பூங்கா, டைடல் பார்க் மற்றும் சுவாமி விவேகானந்தர் இல்லம் ஆகிய அமைவிடங்களில் இந்த ஃபவுண்டேஷன், தானியக்க செயல்பாடுள்ள வெளியார்ந்த டீஃபைபிரிலேட்டர்களை நிறுவியிருக்கிறது. திடீரென மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சையளிக்க கையில் எடுத்துச் செல்லக்கூடிய, உயிர்காக்கும் சாதனங்களான இவை, குரலொலியின் மூலம் இயக்கப்படக்கூடியவை.
·
சென்னை, 25 செப்டம்பர் 2022: தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனைகளுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, உலக இதய தின அனுசரிப்பையொட்டி ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன் என்பதனை தொடங்கியிருக்கிறது. எண்ணிக்கையில் அதிகரித்து வரும் மாரடைப்புகள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு கற்பிக்கவும் மற்றும் அவசர நிலைகளின்போது முதலுதவியாக உடனடி பதில்வினை சிகிச்சையை வழங்க அவர்களை திறனுள்ளவர்களாக ஆக்கவும் இந்த முனைப்புத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை அமைப்பின் மூலம், செம்மொழி பூங்கா, டைடல் பார்க் மற்றும் விவேகானந்தர் இல்லம் (ஐஸ் ஹவுஸ்) ஆகிய இடங்களில் தானியக்க செயல்பாடு கொண்ட வெளியார்ந்த டீஃபைபிரிலேட்டர் சாதனங்கள் (AED)நிறுவப்பட்டுள்ளன. ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். எழிலன் இவற்றை தொடங்கி வைத்தார்.
தானியக்க எக்ஸ்டர்னல் டீஃபைபிரிலேட்டர் (AED) என்பது, மாரடைப்பு ஏற்படும் ஒரு அவசரநிலை சூழலில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இந்த AED சாதன அமைப்பின் ஒரு பேட்டரி மற்றும் பேடு எலக்ட்ரோடுகள் போன்ற துணைச் சாதனங்கள் உள்ளடங்கும். இசிஜி எனப்படும் எலக்ட்ரோ கார்டியோகிராமில் கண்டறிந்து, இதய பாதிப்பு நிலையை உணரவும் மற்றும் ஒரு மின்அதிர்ச்சியை ஒரு பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கவும் இவை அவசியமாகும். எளிதில் எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்லக்கூடிய இச்சாதனம், குரல் வழி நினைவூட்டல்களை, ஒன்றன் பின் ஒன்றாக அறிவுறுத்தல்களை வழங்குகிறது; AED -ஐ பயன்படுத்த குறைந்தபட்ச பயிற்சியினை பெற்றிருக்கும் எந்தவொரு நபராலும் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்ற முடியும் மற்றும் புது அமைவிடத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபரின் இதயஓட்ட லயத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு உதவ AED -ஐ பயன்படுத்த இயலும். இதன் மூலம் மேலதிக சிகிச்சைக்காக ஒரு ஆம்புலன்ஸ் வரும் வரை மாரடைப்பு ஏற்பட்ட நபரை உயிரிழப்பு ஏற்படாதவாறு தடுத்து வைத்திருக்க இயலும்.