தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் கண்டன ஆர்பாட்டம்

தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் சங்கம் கண்டன ஆர்பாட்டம்

தென்னிந்திய மேடை கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு அனுமதி கோரி மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களின் கவனத்திற்கு , மேடை நடன கலைஞர்கள் ஆகிய நாங்கள் மேடையில் பக்தி பாடல்கள் , தேச பக்தி பாடல்கள் , பொது நலன் கருதி சமுதாய விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி மக்களை மகிழ்விக்கிறோம் .

நாங்கள் மறைந்த மற்றும் மறக்க முடியதா அன்றைய நடிகர்கள் முதல் இன்றைய நடிகர்களை முன்னிருத்தி பாடல்களுக்கு இசைக்கேற்ப நடன அசைவுகளால் மக்களின் மனதில் உள்ள கவலை மற்றும் மன அழுத்தத்தையும் மறக்க செய்கிறோம் .

அன்றைய சாதனை நடிகர்கள்

அன்று : எம்.ஜி.ஆர் , சிவாஜி , சந்திரபாபு , நாகேஷ் இன்னும் பல இன்று ரஜினி , கமல் , விஜய் , அஜீத் சிம்பு தனுஷ் நாங்கள் இந்த மேடை நடன கலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறோம். எங்கள் குழந்தையின் படிப்பு , மருத்துவ செலவு மற்றும் குடும்பத்திற்கான அனைத்தும் இந்த மேடை நடனம் தான் தந்தது , எங்களுக்கு தெரிந்ததும் இந்த மேடை நடனம் மட்டும் தான் எங்கள் வாழ்வாதாரமே இந்த மேடை நடனத்தை நம்பி இருக்கிறோம் . ஆகையால் நடன கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காத்திட எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

தென் இந்திய மேடை நடன கலைஞர்களின், கோரிக்கைகள்

  1. தென் இந்திய மேடை நடன கலைஞர்களுக்கு நல வாரியம் அமைத்தல் ,
  2. ஆபாச நடனம் ஆடுபவர்களை தவிர்த்து உண்மையான மேடை நடன கலைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தல் .
  3. ஆபாச நடனம் ஆடுபவர்களையும் அவர்களுக்கு உதவி புரிபவர்களையும் காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் .

4.மூத்த மேடை நடன கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல்.

  1. ஊனமுற்றோர் மேடை நடன கலைஞர்களுக்கு உதவி வழங்குதல் .
  2. தமிழக முழுவதும் தென் இந்திய மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு காவல்துறைக்கு அனுமதி அளிக்க ஆணை பிறபிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

தென்னிந்திய மேடை நடன கலைஞர்களின் பொது செயலார்
( S. முகுந்தன் )

District News