அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் தொடங்கும் மாண்புமிகு சமூக நலம் மற்றும் பெண்களின் திறனதிகார துறையின் அமைச்சர் திருமதி. P. கீதா ஜீவன் இந்த சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்தார். 

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் தொடங்கும் மாண்புமிகு சமூக நலம் மற்றும் பெண்களின் திறனதிகார துறையின் அமைச்சர் திருமதி. P. கீதா ஜீவன் இந்த சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்தார். 

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் தொடங்கும் 

அப்போலோ பிரெஸ்ட் கேன்சர் டைரிஸ் (ABCD) 

புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையையும், அக்கறையையும், கனிவையும் மற்றும் விழிப்புணர்வையும் வழங்குவதே இந்த ஆதரவுக் குழுவின் நோக்கமாகும். 

சென்னை: அக்டோபர் 15, 2022: தெற்காசியா மற்றும் மத்தியக்கிழக்கு பிராந்தியத்தின் முதல் மற்றும் ஒரே புரோட்டான் தெரபி சென்டராக சிறப்பான சேவையாற்றி வரும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் (APCC), அப்போலோ பிரெஸ்ட் கேன்சர் டைரிஸ் என்ற பெயரில் ஒரு விரிவான சுகாதார முனைப்புத்திட்டத்தை தொடங்கியிருக்கிறது.  மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான ஒரு ஆதரவுக் குழுவாக இது செயல்படும்.  புற்றுநோய் பாதிப்பின் சிரமமான பயணத்தை சிகிச்சையின் மூலம் வெற்றி கண்டு வாழ்ந்து வரும் நபர்களோடு தற்போது புற்றுநோயால் அவதியுறும் நோயாளிகளைப் பிணைப்பதன் வழியாக வலுவான உளவியல் ஆதரவை இந்நோயாளிகளுக்கு வழங்குவதே இந்த முன்னெடுப்பின் சிறப்பு நோக்கமாகும். புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில்  பாதிக்கப்பட்ட நபர்களோடு களத்தில் முன்னணியில் தொடர்ந்து இருப்பதில் APCC பெருமை கொள்கிறது.  மிகச்சிறந்த சிகிச்சையையும், ஆதரவையும் மார்பக புற்று நோயாளிகளுக்கு வழங்குவதற்கான தனது குறிக்கோள் மற்றும் செயல்திட்டத்தில் தொடர்ந்து மேம்பாடுகளைச் செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை உருவாக்கும் பணியை இப்புதிய முனைப்புத்திட்டத்தின் மூலம் APCC தொடர்கிறது.  

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சமூக நலம் மற்றும் பெண்களின் திறனதிகார துறையின் அமைச்சர் திருமதி. P. கீதா ஜீவன் இந்த சிறப்பான திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இதற்கான தொடக்க விழா நிகழ்வில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் – ன் செயலாக்க துணைத்தலைவர் மிஸ். பிரீத்தா ரெட்டி, கதிரியக்க புற்றுநோயியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். சப்னா நாங்கியா, மார்பக புற்றுநோயியல் – பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மஞ்சுளா ராவ், சென்னை – அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். சுஜித் குமார் முள்ளபாலி மற்றும் யுகே – ஐ சேர்ந்த மார்பக புற்றுநோய் சேம்பியன் மிஸ் கிளேர் யங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பரிசோதனைக்குப் பிறகு, மார்பக புற்றுநோய் தனக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தியைப் பெறுவது எந்தவொரு பெண்ணுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை. மேலும், இதற்கான சிகிச்சை செயல்முறையும், கடும் களைப்பிற்கு வழிவகுப்பதோடு, உறக்கமின்மை, இரத்தசோகை, குமட்டல், வலி மற்றும் மனநிலையில் மாற்றம் போன்ற பிற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.  சில நேரங்களில், இந்த பாதிப்புநிலை உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதனால் சமூக உறவுகளில் ஏற்படும் பாதிப்பு மற்றும் அசௌகரியத்தையும் நோயாளி கையாள வேண்டியிருக்கும். 

Health