“பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் இதுவே இறுதிக்கெடு, இறுதி வாய்ப்பு”…
“78 நாட்களில் மொத்தம் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோரில் 2 கோடியே 42 லட்சம் பேர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னோடு இணைத்து இருக்கிறார்கள் இது ஒரு மகத்தான பணி ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணி என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம் தெரிவித்துள்ளார்”…..
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்…
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இன்று காலை 11 மணி வரை 78 நாட்களில் மொத்தம் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோரில் 2 கோடியே 42 லட்சம் பேர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு என்னோடு இணைத்து இருக்கிறார்கள் இது ஒரு மகத்தான பணி ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணி ஒரு வெற்றிப் பயணமாக உள்ளது என்று கூறினார்…..
மேலும் பேசிய அவர் 90.69 விழுக்காடு இன்று காலை வரை இணைத்து இருப்பதாகவும், மீதம் இருக்கக்கூடிய 9.31 விழுக்காடு பேர் நிலுவையில் உள்ளதாகவும், வீடுகளைப் பொறுத்தவரை 2 கோடியே 17 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்றும் இன்னும் 15 லட்சம் பேர் இணைக்க வேண்டி உள்ளதாகவும் கைத்தறியை பொறுத்தவரை 74 ஆயிரம் மின்னிணைப்புகளில் 70 ஆயிரம் மின்னிணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அதில் 4 ஆயிரம் பாக்கி உள்ளதாகவும், விசைத்தறியை பொறுத்தவரை 1 லட்சத்து 63 ஆயிரம் உள்ளது, 1 லட்சத்தி 52ஆயிரம் பேர் இணைத்துள்ளனர் இதில் 9 ஆயிரம் பேர் மட்டுமே பாக்கி உள்ளதாகவும் கூறிய அவர் இன்னும் குடிசைகள் தான் அதிகம் உள்ளதாகவும் 9 லட்சத்தி 44 ஆயிரம் பேரில் 5 லட்சத்து 11 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர் எனவும் இன்னும் 4 லட்சத்தி 33 ஆயிரம் பேர் குடிசை வாசிகள் மின்னினைப்புடன் ஆதார இணைக்க வேண்டி உள்ளது என்று கூறினார்….
தொடர்ந்து பேசிய அவர் மொத்தமாக 9% இணைக்க வேண்டிய சூழல் உள்ளது என்றும் ஒரு மின் இணைப்பு என்னுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதரை இணைத்துக் கொள்ளும் வசதிகள் உருவாக்கப்பட்டு அதை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூடுதலாக உள்ள இந்த 9 சதவீத பேர் மின் இணைப்பை ஆதாரோடு இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகவும் அதற்குள்ளாக அனைத்து நுகர்வோர்களும் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர் கடைசி நேரத்தில் முயற்சி செய்யாமல் நாளையிலிருந்து தொடங்கி 15 நாட்கள் முன்பாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்….
இந்த 15 நாள் என்பது இறுதி வாய்ப்பு இனி கால நீட்டிப்பு என்பது மின்வாரிய சார்பில் வழங்கும் வாய்ப்பு இல்லை இதுவே இறுதிக் கெடு, இதுவே இறுதிவாய்ப்பு என்று கூறிய அவர் நிலக்கரி மாயம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது அவர்கள் மீது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்….
இடம் – அண்ணா சாலை, சென்னை