கிரெடாய் சென்னை நடத்ததும் ‘‘ஃபேர்ப்ரோ 2023’’ சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

கிரெடாய் சென்னை நடத்ததும் ‘‘ஃபேர்ப்ரோ 2023’’ சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

கிரெடாய் சென்னை நடத்ததும் ‘‘ஃபேர்ப்ரோ 2023’’ சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

~ இந்தியாவின் பிரமாண்ட – நம்பகமிக்க ‘‘ஃபேர்ப்ரோ 2023’’ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 17 முதல் 19–ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது ~

சென்னை, பிப்.7– 2023: ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களின் உச்ச அமைப்பான இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு – சென்னை மண்டலம் (கிரெடாய் சென்னை) அதன் வருடாந்திடர சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சியின் 15வது ஆண்டு “ஃபேர்ப்ரோ 2023” கண்காட்சியை வரும் பிப்ரவரி 17 முதல் 19 வரை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்த இருக்கிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

வீடு வாங்குபவர்கள், ரியல் எஸ்டேட் துறை முதலீட்டாளர்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றிற்கு இந்த கண்காட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் இந்த அமைப்பில் உள்ள 60க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துகளை 20 லட்ச ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையில் காட்சிப்படுத்த உள்ளனர். மேலும் இங்கு வந்து சொத்துகளை வாங்குபவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் இந்நிறுவனங்கள் வழங்க உள்ளன. இந்த கண்காட்சிக்கு முன்னதாக, பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 12 வரை, தி. நகர், விஜயா மஹாலில் வீட்டுக் கடன் மேளா நடத்தப்பட உள்ளது. அங்கு வீடு வாங்குபவர்கள் தங்கள் வீட்டுக் கடனுக்கான முன் அனுமதியை வங்கிகளிடம் இருந்து பெறலாம்.

ஃபேர்ப்ரோ 2023 குறித்து கிரெடாய் சென்னை மண்டல தலைவர் எஸ். சிவகுருநாதன் கூறுகையில், இந்த கண்காட்சியில் இடம் பெறும் அனைத்து திட்டங்களும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்று பதிவு செய்யப்பட்டவையாகும். எனவே இங்கு வீடு வாங்குபவர்களுக்கு முழுமையான மன அமைதி கிடைப்பதோடு, சொத்துகள் தொடர்பாக எந்தவிதமான வில்லங்கங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் இங்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான இடம், வீடு, பிளாட், வணிக இடங்களை எந்தவித அச்சமும் இன்றி நம்பிக்கையுடன் தேர்வு செய்யலாம்.

Business