மாண்புமிகு குறு.சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் டான்சி நிறவனத்தினால் புதியதாக நிறுவப்பட்ட காட்சியக விற்பனை கூடத்தை தொடங்கியும் வைத்தார்கள்.

மாண்புமிகு குறு.சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் டான்சி நிறவனத்தினால் புதியதாக நிறுவப்பட்ட காட்சியக விற்பனை கூடத்தை தொடங்கியும் வைத்தார்கள்.

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்களால் கடந்த ஆண்டு 2021-22ஆம் மானியக் கோரிக்கையில் டான்சி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த ஒரு பிரத்யேக காட்சியகம் ( Showroom Cum Sales Centre) மற்றும் மின் வணிக இணைய முகப்பு (e-Commerce online portal ) ஆகியன ரூ.3 கோடி செலவில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு குறு.சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் டான்சி நிறவனத்தினால் புதியதாக நிறுவப்பட்ட காட்சியக விற்பனை கூடத்தை திறத்து வைத்து ( Showroom Cum Sales Centre) மின் வணிக இனணய முகப்பை ( e-commerce online portal ) தொடங்கியும் வைத்தார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் நம்ம School என்கிற திட்டத்திற்கு டான்சி நிறுவனம் ரூ.4.கோடியினை நன்கொடையாக அளித்துள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியின் போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள் டான்சியில் பணியிலிருந்த போது உயிர் நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மூவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்

Business