சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்பிபிஐ கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்டம் ராயபுரம் தொகுதியை சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இராயபுரம் தொகுதி தலைவர் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் புஸ்பராஜ்,மாவட்ட பொது செயலாளர் காஜா மைதீன்,மாவட்ட அமைப்பு செயலாளர் அசாருதீன்,மாவட்ட செயலாளர் பூட்டோ மைதீன் மாவட்ட பொருளாளர் சானவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் நிஜாம் முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் சிறப்பு விருந்தினராக இராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி,இராயபுரம் தொகுதி செயலாளர் சகாபுதீன்,அன்சர் கான்,பொருளாளர் நிஜாம் மேலும் இராயபுரம் தொகுதி நிர்வாகிகள் பெண்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..