ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இன்று ‘பிராரம்பா 2026’ (Prarambh 2026) நிகழ்வில் தனது 4680 பாரத் செல் தளத்தின் விரிவாக்கத்தை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இன்று ‘பிராரம்பா 2026’ (Prarambh 2026) நிகழ்வில் தனது 4680 பாரத் செல் தளத்தின் விரிவாக்கத்தை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.

பிராரம்பா 2026′ நிகழ்வில் இந்தியாவின் புதிய ஆற்றல் தளமாகத் தனது 4680 பாரத் செல் – ன் விரிவாக்கத்தை அறிவிக்கும் ஓலா எலக்ட்ரிக்

பெங்களூரு, ஜனவரி 14, 2026: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இன்று ‘பிராரம்பா 2026’ (Prarambh 2026) நிகழ்வில் தனது 4680 பாரத் செல் தளத்தின் விரிவாக்கத்தை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இந்த 4680 பாரத் செல் தளம் மூலம், வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இப்போது 4680 பாரத் செல்களையோ அல்லது 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்குகளையோ நேரடியாக வாங்கலாம். இவற்றை வாகனங்கள், மனித உருவம் கொண்ட ரோபோக்கள், ட்ரோன்கள் மற்றும் கையடக்க மருத்துவ உபகரணங்கள் போன்ற பல்வேறு உபயோகங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட புதிய ஆற்றல் சேமிப்புத் தீர்வுகளைக் கொண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் வணிகங்களும் புத்தாக்க செயல்பாடுகளில் ஈடுபடவும் மற்றும் விரைவாக தங்களது செயற்பரப்பை விரிவுபடுத்தி வளர்ச்சி காணவும் இந்த அறிவிப்பின் மூலம் ஓலா வழிவகை செய்கிறது.

மேலும், தனது வீட்டு உபயோக பேட்டரி ஆற்றல் சேமிப்பு சாதனமான (BESS) ‘ஓலா சக்தி’ இப்போது விற்பனைக்குக் கிடைப்பதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘ஓலா சக்தி’ 6kW/9.1kWh மாடலின் விநியோகம் ஜனவரி 2026 இறுதியிலும், ‘ஓலா சக்தி’ 3kW/5.2kWh மாடலின் விநியோகம் பிப்ரவரி 2026 நடுப்பகுதியிலும் தொடங்கும். இதுதவிர, 4680 பாரத் செல்லால் இயங்கும் தனது முதன்மை மோட்டார் சைக்கிளான ரோட்ஸ்டர் X+ 9.1kWh (Roadster X+) டெலிவரியையும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது; இது, ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை செல்லும் திறனுள்ளது. அத்துடன், S1 Pro+ 5.2kWh வாகனத்தின் விநியோகத்தையும் இந்தியா முழுவதும் ஓலா நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

4680 பாரத் செல், இந்த தயாரிப்புகளின் மைய அம்சமாக திகழ்கிறது.  ஓலா நிறுவனத்தால், சுயமாக அதன் தொழிலகத்திலேயே உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் ஆற்றல் செயல்தளமாகும். இது இப்போது நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மற்றும் ‘ஓலா சக்தி’ ஆகிய இரண்டிற்கும் ஆற்றல் அளிக்கிறது – அதாவது ‘ஒரு செல், ஒரு செயல்தளம், இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்புத் தொகுப்பு’ (one cell, one platform, one portfolio). நவீன இந்திய வீடுகள், விவசாயப் பண்ணைகள் மற்றும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு ஆதார வளமாக ‘ஓலா சக்தி’ திகழ்கிறது. ஆற்றல் ஆதாரத்தை அணுகுவது, கட்டுப்படுத்துவது மற்றும் நுகர்வது ஆகிய செயல்பாடுகளில் இந்திய மக்களுக்கு ஒரு அடிப்படையான மாற்றத்தை வழங்கும் ஒரு நவீன வளர்ச்சியை ஓலா சக்தி பிரதிபலிக்கிறது. 

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியதாவது: “4680 பாரத் செல் என்பது எங்களின் நிறுவனத்திலேயே உருவாக்கப்பட்ட ஆற்றல் மற்றும் போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பின் மைய அம்சமாகும்.  நுகர்வோர் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான மின்ஆற்றல் என்பதையும் கடந்ததாக இந்த தளத்தை நாங்கள் இப்போது விரிவுபடுத்தி வருகிறோம். 4680 பாரத் செல் தளத்தை வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்வதன் மூலம், மனித உருவம் கொண்ட ரோபோக்கள் மற்றும் ட்ரோன்கள் முதல் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கையடக்க மருத்துவ இயந்திரங்கள் வரை பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு நாங்கள் வழிவகுத்திருக்கிறோம். வணிக நிறுவனங்கள் 4680 பாரத் செல்லை நேரடியாக வாங்கலாம் அல்லது எங்களின் 1.5kWh 4680 பாரத் செல் பேட்டரி பேக்கைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை விரைவாக உருவாக்கலாம் மற்றும் விரிவுபடுத்தலாம். போக்குவரத்து, ஆற்றல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கு உதவும் ஒரே செல் மற்றும் அளவை உயர்த்தக்கூடிய ஒரே தளத்தை அறிமுகம் செய்திருப்பதன் மூலம்  இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட எதிர்காலத்திற்கு ஏற்ற ஆற்றல் அடித்தளத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்,” என்றார்.

‘ஓலா சக்தி’ (Ola Shakti) இப்போது இரண்டு அளவீடுகளில் கிடைக்கிறது.  3kW/5.2kWh மாடல் ₹1,49,999 என்ற விலையிலும், 6kW/9.1kWh மாடல் ₹2,49,999 என்ற விலையிலும் கிடைக்கிறது. இந்த சாதன அமைப்பு ஏர் கண்டிஷனர்கள், ஃப்ரிட்ஜ்கள், இண்டக்‌ஷன் குக்கர்கள், விவசாய பம்புகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை இயக்கும் ஆற்றலை வழங்குகிறது. இது விரைவாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது மற்றும் முழுமையான சார்ஜில் 1.5 மணிநேரம் வரை பேக்கப் ஆற்றலை வழங்கக்கூடியது.  இத்தயாரிப்பை ஓலா எலக்ட்ரிக் இணையதளம் மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஸ்டோர்களில் வாங்கலாம். 9.1kWh மாடலின் விநியோகம் ஜனவரி 2026 இறுதியிலும், 5.2kWh மாடலின் விநியோகம் பிப்ரவரி 2026 நடுப்பகுதியிலும் தொடங்கும்.

₹1,89,999 விலையில் கிடைக்கும் ரோட்ஸ்டர் X+ 9.1kWh (Roadster X+), 4680 பாரத் செல்லுடன் கூடிய 9.1kWh பேட்டரி மற்றும் 11kW மோட்டாரைக் கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை தூரம் வரை செல்லும்; மற்றும் மணிக்கு 125 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும், இது வெறும் 2.7 வினாடிகளில் 0-40 கி.மீ வேகத்தை எட்டுகிறது.

Launch