தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம்

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம்

மின்சார வாரியத்தில் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும்
கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர் பதிவிக்கு மாற்ற வேண்டும் என்று நீதி கோரி சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் கண்டனப் போராட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 9,613 கேங்மேன் பணியாளர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக இரவு பகல் பாராமல் மழை புயல் வெள்ளம் என எந்தச் சூழ்நிலையிலும் உயிரைப் பணயம் வைத்து தமிழக மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க உழைத்து வருகின்றோம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 9,613 பேர்
கேங்மேன்  என்ற பதவியில் நியமிக்கப்பட்டனர் இவர்கள் மின் கம்பம் நட குழி எடுத்தல் கம்பங்களை எடுத்துச் செல்லுதல் மேற்பார்வையின் கீழ் கம்பங்கள் மற்றும் கம்பிகளை நிறுவுதல் போன்ற தொழில்நுட்பம் அல்லாத பணிகளை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டனர். ஆனால் மின்வாரியத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக கள உதவியாளர், கம்பியாளர் பணி முதல் மின் பாதை பராமரிப்பு மின் தடைகளை சரிசெய்தல் MRT பணி, பண்டகசாலை பணி, அலுவலக பணி, Gls பணி, துணை மின் நிலை பணிகள் LT/HT உயர் அழுத்த மின்பாதை பணிகள் புயல் மழை இரவு நேர அவசர பணிகள் என உயிரைப் பணயம் வைத்து அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த பணிகளையும் கேங்மேன் பணியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள் மின்கம்பதத்தில் ஏறும் முதல் பணியாளர் கேங்மேன் மின்சாரம் தாக்கி விழும் முதல் மனிதனும் கேங்மேன் ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை இது நான்கரை ஆண்டுகளாக மேலாக தொடர்ந்து அலட்சியம் கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர் பதவிக்கு மாற்ற வேண்டும் என்ற நியாயமான அடிப்படை கோரிக்கையை முன்வைத்து பலமுறை எழுத்துப்பூர்வமாக, சட்டபூர்வமாக மனுக்கள் அளித்தும், அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தியும், மின்வாரிய நிர்வாகம் இதுவரை தீர்மானமான எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை வாய்மொழி வாக்குறுதிகள் மட்டும், எழுத்துப்பூர்வ உத்தரவு இல்லை நம்பிக்கைக்கு பதிலாக ஏமாற்றம் மட்டுமே.

இந்த போராட்டம் வெறும் பதவி மாற்றத்திற்கான கோரிக்கைக்கானது மட்ம் அல்ல இது உயிர் பாதுகாப்புக்கான போராட்டம், கள உதவியாளருக்குரிய  பணிகளை செய்து வரும் கேங்மேன் பணியாளர்களை ஒரே வேலை ஒரே பதவி  என்ற அடிப்படையில் கள உதவியாளராக மாற்றக்கோரும் சமூக நீதிக்கான போராட்டம் இது கேங் மேன்களின்  குடும்பத்தின் எதிர்காலத்துக்கான போராட்டம்

District News