சென்னை நீலாங்கரை சேர்ந்த பெண்மணியிடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி.

சென்னை நீலாங்கரை சேர்ந்த பெண்மணியிடம் நிலம் வாங்கி தருவதாக பண மோசடி.

சென்னை நீலாங்கரை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கு இடம் வாங்கி தருவதாக நிலதரகர்கள் கண்ணன், சேகர் ஆகியோர் மூலம் மும்மூர்த்தி என்பவர் அறிமுகம் ஆகிறார்.

மும்மூர்த்தி  ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த லஷ்மி நாராயணன் S/o பாலன் நாயக்கர் என்பவருடைய 44 சென்ட் நிலம் சர்வே எண் 251/15மற்றும் TS No 44 / 5,1A விற்பனைக்கு உள்ளது . 

இந்த நிலத்தை விற்க  பவர்  ஆஃப் அட்டர்னியாக செயல்பட என்னை  நியமித்துள்ளார். ஆகவே  இந்த குறிப்பிட்ட இடத்தை என் மூலமாக உங்களுக்கு விற்பனை செய்கிறேன் என்றார்

. இவரது பேச்சை நம்பி ஜெயந்தி என்பவர் அந்த இடத்தை 1.80 கோடிக்கு விலை பேசி முதல் கட்டமாக ரூ.3 இலட்சம்  பணம் மற்றும் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்குகினார்

 இந்நிலையில் 02-03-2020 இடத்தின் உரிமையாளர் லக்ஷ்மி நாராயணன் இறந்துவிடுகிறார்.

 மும்மூர்த்தி அதனை மறைத்து இரண்டு மாத்திற்கு பிறகு 2.5.2020 அன்று  இடத்திற்கான ஒப்பந்தம் செய்துள்ளார்.

வாங்கும் நபரான ஜெயந்தியிடம் இடத்தின் உரிமையாளர் இறந்தை மறைத்து ஒப்பந்தம் செய்துள்ளார். 

நில விற்பனைக்கு பவர் கொடுத்த உரிமையாளர் இறந்து விட்டால் அதனுடைய பவர் தானாகவே காலாவதி ஆகிவிடும் என்பதை தெரிந்தே அதனை மறைத்து இடத்திற்கான ஒப்பந்தம் செய்வது செல்லாது என்று தெரிந்தே எங்களை ஏமாற்றியிருக்கிறார்.

 இந்நிலையில் ஜெயந்தி  சர்வேயரை கொண்டு நில அளவை செய்த போது அது வேறொரு நபரின் பெயரில் உள்ளது என்று தெரியவந்தது.

அந்த தவறை சுட்டிக்காட்டிய போது 

 மும்மூர்த்தி  நீங்கள் கொடுத்த ரூ.8 லட்சத்திற்கு பதிலாக ரூ 25 லட்சம் தருவதாக கூறினார். இதை பெரிது படுத்த வேண்டாம் என்று கூறி சமாதானம் செய்ய முயற்சித்தார்.

இந்நிலையில் இறந்து போன இலட்சுமி நாராயணன்

வாரிசுகளுக்கு இச்செய்தி  தெரியவரவே  மும்மூர்த்தி மூலம் இடத்தை விற்பதை தவிர்த்து விட்டு ஜெயந்தியிடம்  நேரடியாக 

எங்களிடம் பேசி இடத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார் . 

இதற்கு  மும்மூர்த்தி ஒத்து வராத காரணத்தால் வழக்கறிஞர் டைகர் சி. பொன்னுசாமி மூலம் டி.ஜி.பி அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. 

அந்த மனு மீதான விசாரணையை நீலாங்கரை காவல் நிலையத்திற்கு அனுப்பபட்டது.

அதனை தொடர்ந்து நீலாங்கரை ஜே8 (J8) காவல் நிலையத்தில் ஜெயந்தி தரப்பினை அழைத்து விசாரணை செய்தனர். 

விசாரணைக்கு பிறகு புகார் மனுதாரர் ஜெயந்தி மற்றும் அவரது வழக்கறிஞர் டைகர் சி. பொன்னுசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது :

ஜே8 காவல் ஆய்வாளர் விசாரணைக்கு பிறகு

15 நாட்கள் மும்முர்த்திக்கு கால அவகாசம் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

 15 நாட்களுக்குள் இதற்கான முடிவு வரவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய உள்ளோம் என்று அவர்கள் கூறினார்கள்.

District News