தனிநபர் சாம்பியன் பட்டத்தைஎஸ்.ஆர்.எம் மாணவர் கவின் ராஜ் வென்று சாதனை

தனிநபர் சாம்பியன் பட்டத்தைஎஸ்.ஆர்.எம் மாணவர் கவின் ராஜ் வென்று சாதனை

80 வது மாநில அளவிலான சீனியர்  சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா.

தனிநபர் சாம்பியன் பட்டத்தை
எஸ்.ஆர்.எம் மாணவர் கவின் ராஜ் வென்று சாதனை

காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் பாரிவேந்தர் அக்யோட்டிக் வளாகத்தில் ஜூன் -1,2 ஆகிய தேதிகளில்  நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான   சீர்மிகு 80வது  மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

போட்டியை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மோகன கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க தலைவர் டி. சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை  சென்னை ஏசஸ் கிளப்  பெற்றது.

தனிநபர் சாம்பியன்ஷிப்பை 

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர் கவீன்ராஜ்  வென்று பெருமை படுத்தினார்.

இப்போட்டியில்  இதற்கு முன் செய்த 11 மாநில சாதனைகளை முறியடித்திருக்கிறார்கள்.

மேலும்  எஸ்.ஆர் .எம்  பல்கலைகழகத்தின் பதிவாளர் பேராசிரியர் பொன்னுச்சாமி வெற்றிபெற்ற நீச்சல் வீரர்கள், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தார்.

Sports