தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்க மாநாடு 

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்க மாநாடு 

சென்னை, ஜூலை-31, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்க  கோரிக்கை விளக்க மாநாடு 

சென்னை பாரிமுனையில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் முன்னாள் தலைவர் பொன் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கட்டுமான தொழிலாளர்கள் பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார குறித்து அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் தென்னக மையத்துடன் சர்வதேச கட்டுமான தொழிலாளர்கள் அமைப்புடன்  
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டு

இந்த மாநாட்டில் 20 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களின் ஆதரவை பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் லஞ்சம் ஊழல் இன்றி செயல்படும் நிர்வாகத்திற்குபாராட்டு தெரிவித்தும் 

பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களில் இருந்து 700 அதிகமான டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை இந்த மாநாட்டு மூலமாக வரவேற்கிறோம்.

மத்திய அரசு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என இந்த மாநாடு வலியுறுத்துகிறது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் தலைவர் பொன் குமார் 
கட்டுமான தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்துவது சம்பந்தமாக சர்வதேச கட்டுமானம் மற்றும் தொழிலாளர்கள் அமைப்போடு இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தினர் தென்னிந்திய மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.

பருவநிலை மாற்றம் என்பது தற்போது உலக அளவில் மிரட்டி கொண்டிருக்கும் தலையாய் பிரச்சனையாகும் . அளவுக்கு மீறிய வெயில், மழை அதனால் ஏற்படும் வெள்ளம், மண் சரிவு, சுனாமி பேரலை போன்ற பல்வேறு இயற்கை பேரிடங்கள் ஏற்படுகிறது .  இதனால் நோடி பாதிப்புக்குள்ளாகிறார்கள். மேலும் வெயில், வெப்பம் காரணமாக 

கிட்னி, இதயம் கோளாறு,பக்கவாதம் போன்ற போன்ற நோய்களால் பெரிதும்
பாதிக்கப்டுகின்றனர்.தொழிலாளர்களின்
பாதுகாப்பதற்காக 42 டிகிரி வெப்பநிலை தாண்டும் போதும் 20 சென்டிமீட்டர் அளவு மழை தாண்டும் போது அந்த பகுதியில் உள்ள பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 400 வேலை இழப்பு உதவித்தொகை வழங்குவதற்கான ஒரு இன்சூரன்ஸ் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசிடம் மனுவாக கொடுத்துள்ளோம் . இந்த திட்டத்தை விரைந்து அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
என்ற கூறினார்.

District News