சென்னை, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து தொகுப்பூதிய அலுவலக பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர்இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் உண்ணாவித போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து பேசிய சங்கத் தலைவர் இதயவேந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த நிதியாண்டிற்கான ஊதிய உயர்வை 2014 -இல் வழங்கியது போல் குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஊதிய மறு நிர்ணயம் செய்திட வேண்டும்.
இ.எஸ்.ஐ , பி.எஃப் நிதி, விருப்பப் பணி மாறுதல் வழங்கி காலிப் பணியிடங்களை நிரப்புதல், நிரந்தர பயணப்படியை இன்றைய விலைவாசிக்கு ஏற்றவாறு வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளி ஊழியர்களின் சிறப்பு பயணப்படியை உயத்தி வழங்கிட வேண்டும். தொகுப்பூதிய அலுவலகப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கும் போழுது ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும்.
ஒய்வூதியம், தொகுப்பூதிய அலுவலகப் பணியாளர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது மருத்துவ ஆவணங்கள் அடிப்படையில் மருத்துவ விடுப்பு வழங்கிட வேண்டும் ஆகிய 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரத போட்டத்தில் மாநில முழுவதிலுமிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

