தமிழ்நாடு மாடல்ஸ் அசோசியேஷன்

தமிழ்நாடு மாடல்ஸ் அசோசியேஷன்

சென்னை :17 தமிழ்நாடு மாடல்ஸ் அசோசியேஷன் தொடங்கப்பட்டதை இன்று அதிகாரப்பூர்வமாக சங்க நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டது .  

சங்க நிர்வாக உறுப்பினர்கள் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை நேரில் சந்தித்தபோது இந்த சங்கம் விளம்பர நடிகர்கள் மாடல்கள் மற்றும் அழகுப்போட்டி வெற்றியாளர்கள் என மாடலிங் துறையில் அனுபவம் வாய்ந்த மாடல்களுக்கா துவங்கப்பட்டது எனவும் அவர்கள் நல்வாழ்வு , முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பே சங்கத்தின் நோக்கமாகவும் ‌ கொண்டு துவங்கப்பட்டது என சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்

தமிழ்நாட்டிலிருந்து 13 மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுக்கபட உள்ளதாகவும் இந்த சங்கத்தின் பதவி ஏற்பு விழா வரும் நவம்பர் மாதம் மிக பிரம்மாண்டமாக பல நட்சத்திரங்கள் பல பிரபலங்கள் , சினிமா துறை சங்க தலைவர்கள் , அரசியல் தலைவர்கள் முன்நிலையில் நடைபெறும் என கூறினார்கள் , தமிழ்நாடு மாடல்ஸ் அசோசியேஷன் சார்பில் மாடல்கலுக்கு என சிறப்பு விருதுகள் வழங்கும் விழா , ஃபேஷன் ஷோ , ஃபேஷன் வீக் , என பல நிகழ்ச்சிகள் நடத்த  உள்ளதாகவும் தெரிவித்தனர்

தமிழ்நாட்டில் மாடல்கலுக்காக சங்கம் உருவாக்கப்பட்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது

District News