
தமிழ்நாடு கரப்பான் பூச்சி கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் மாநிலம், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மாநிலத்தலைவர் சி.பிரம்மா பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செயலாளர் பி.சிவக்குமார், பொருளாளரும் தலைமை ஒருங்கிணைப்பாளுருமான ஆர்.ஜனார்த்தனன், துணைத்தலைவர் கிருஷ்ணகுமார், இணைச் செயலாளர் பாலாஜி , துணைச்செயலாளர் ஜோசப் பெத்தானியேல், மாநில கொள்கை பரப்புச் செயலாளார் விஜய் டிவி கலையரசன் மற்றும் மாநில பிற அணியினர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழ்நாடு CJP கட்சியின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
இந்திய அளவில் CJP ஒரு இயக்கமாக உள்ளன. தேசிய அளவில் ஒரு மாற்றம் வேண்டுமென்றால் ஒரு அரசியல் கட்சியாக செயல்பட வேண்டியது அவசியம். அதை தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறோம்.
தமிழக முதல்வர் செயல்பாடுகள் பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:-
நாங்கள் ஆட்சி வந்தால் ஊழலை முற்றிலுமாக ஒழிப்போம் என்று கூறிவிட்டு, இன்று மாற்று கட்சியில் இருந்த ஊழல் பேர்வழிகளை தன் கட்சியில் இணைத்து கொண்டிருக்கிறார்.
இது போன்ற செயல்பாடுகள் மூலம் ஊழலை ஒழிப்போம் என்று சொல்வது அபத்தமான ஒன்று. தன் ஆட்சியில் மாற்றுக் கட்சியிலிருந்து காந்திஜி, நேருஜி, நேதாஜிக்களையா சேர்த்து கொண்டுருக்கிறார். தமிழ்நாட்டிற்கு இது மாற்றமில்லை. விஜயின் ஒரு மாத கால ஆட்சி மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. . ஆகவே தமிழ்நாடு CJP மக்களின் நலனில் அக்கரை கொண்ட கட்சியாக செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

