சென்னை, ஜூலை- 22
திருவண்ணாமலை மாவட்ட வேங்கிக்காலில் அரசு மதுபானக்கடை எண் 9246 மற்றும் காமராஜர் சிலை எதிரில் இயங்கும் கடை எண் 9481 ஆகிய கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும், திருவண்ணாமலை மாவட்ட மதுபான மேலாளர் வசுந்தா தேவி, கடை எண் 9246, மேற்பார்வையாளர் சங்கர், கடை எண் 9481-ன் மேற்பார்வையாளர் சங்கர் ஆகியோரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் சென்னை எழும்பூர் அரசு மதுபான நிர்வாக இயக்குநர் அலுவலகம் அருகில்
தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் ச.கருப்பையா தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை இயக்க திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் ஜெயக்கொடி முன்னிலையில்நடைபெற்ற ஆர்பாட்டத்தை14- இயக்கம் மாநில தலைவர் தீவு திடல் சசிகுமார் துவக்கி வைத்தார்.தலித் விடுதலை இயக்கம் மாநில இணை பொதுச் செயலாளர் கதிர்காமன், மக்கள் சட்ட உரிமை இயக்கம் மாநில தலைவர் அண்ணாத்துரை, மது ஒழிப்பு போராளி இராமதாசு, ஏப்ரல் 14-இயக்கம் சரசு, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் இராமராசன் மற்றும் பல்வேறு முற்போக்குவாதிகளும் கண்டன உரையாற்றினார்கள்.

