காவெட்டி சர்வதேச சட்டக் குழுமம் – அருணை சட்டக் குழுமத்துடன் இணைந்து தமிழகம், சென்னையில் புதிய கிளை அலுவலகம் திறப்பு

காவெட்டி சர்வதேச சட்டக் குழுமம் – அருணை சட்டக் குழுமத்துடன் இணைந்து தமிழகம், சென்னையில் புதிய கிளை அலுவலகம் திறப்பு

அமெரிக்கா மற்றும் பன்னாட்டு சட்ட சேவைகளை இந்தியக் குடிமக்களுக்கு எளிதாக வழங்கும் நோக்கில், ‘காவெட்டி இன்டர்நேஷனல் லா ஃபர்ம்’ (Kaveti International Law Firm) தனது புதிய கிளை அலுவலகத்தை அருணை சர்வதேச சட்டக்
குழுமத்துடன் இணைந்து சென்னை, தி.நகரில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி நிறுவ திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய அலுவலகம் திறப்பு விழா மூலம், எல்லைகளைத் தாண்டிய சட்ட சிக்கல்கள். இம்மிக்கிரேஷன் (குடிவரவு) சவால்கள், பன்னாட்டு வர்த்தகம் மற்றும் பெருநிறுவன சட்ட விவகாரங்களை எதிர்கொள்ளும் இந்தியக் குடும்பங்களுக்கும் தொழில்முனைவோருக்கும் மிகப்பெரிய சட்டப்பூர்வ வழிகாட்டுதல் கிடைக்கவுள்ளது.

சர்வதேச தரத்திலான சட்ட சேவைகள்:

இந்நிறுவனம் தனது சேவைகளின் மூலமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த சர்வதேச வழக்கறிஞர்கள், சொலிசிட்டர்கள், பாரிஸ்டர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் சேவைகளை இந்தியக் கிளை மூலமாக வழங்கவுள்ளது. குறிப்பாக, குடும்ப நல வழக்குகள். வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு விசா மற்றும் குடியுரிமை சிக்கல்கள் போன்றவற்றிற்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான சட்ட விழிப்புணர்வை வழங்க இந்த அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் இந்தியக் குடும்பங்களுக்குத் தேவையான எல்லை கடந்த சட்ட ஆலோசனைகள்.

பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் சட்ட வழிகாட்டல்கள்.

இம்மிக்கிரேஷன் மற்றும் விசா நடைமுறைகளில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான உடனடி சட்ட உதவி மற்றும் தீர்வுகள்.

சென்னையில் தொடங்கப்பட உள்ள இந்த புதிய கிளை அலுவலகம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் சட்ட நடைமுறைகளை அறிந்துகொள்ள விரும்பும் இந்தியர்களுக்கு ஒரு முக்கிய பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் சென்னை தி. நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ரெசிடென்சி டவரில் நடைபெற்றது. இதில் டாக்டர் சீனிவாச ராவ் காவெட்டி, நிறுவனர், காவெட்டி பன்னாட்டு சட்டக் குழுமம், எட்வர்ட் ஓசை, அமெரிக்கா அட்டர்னி & ஆப்ரிக்கா, ( முன்னாள் கானா சட்ட அமைச்சர்), அருணை சர்வதேச சட்டக் குழுமம் நிறுவனர் சுப்ரமணியன் காந்தி ( இந்தியா, அமெரிக்கா & யு.கே), தனஞ்செழியன் IAS, Madras Highcout Advocate Association – Secretary அறிவழகன், E- ladder 4U founder/ CEO , டாக்டர் ஆயிஷா, High court young lawyer association president ராஐரத்தினம், ஆர். சுப்ரமணியன் ( Central Govt standing counsel, high court, தினமலர் நூருல்லா, ஷா லா குழுமம் யூ டீயூபர் ரகுபதி, Small causes court Law Association Ex. Secretary N. காமராஜ்,  PRO காஞ்சிபுரம் தியாகராஜன், ஆந்திரா, தெருங்கானா, தமிழக வழக்கறிஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்

District News