தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம்,

தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம்,

 சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் அலுவலகத்தில் நடைபெற்றது,

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்,

 மாநில பொதுச்செயலாளர் நவநீதகிருஷ்ணன் கூறியது  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களின் தவறான அணுகு முறைகளையும், கூடுதல் பதிவாளர் தன்னிச்சையாக மற்றும் தவறான அணுகு முறைகளையும் கண்டித்தும், ராமநாதபுரம் மண்டல இணை பதிவாளர் வேல்முருகன், கூட்டுறவு சார் பதிவாளருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பணிநீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும் என  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

அனைத்து மாவட்டங்களிலும் சென்னையில் பதிவாளர் அலுவலகத்திலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம், பதிவாளரை கண்டித்தும் அவரின் நடைமுறைகளை கண்டித்தும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சார்பதிவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொள்முதல் செய்து அனுப்பியதில் தரம் குறைந்த பொருள் அனுப்பி விட்டதாக, காரணத்தைக் கூறி அவரை பணியிட நீக்கம் செய்துள்ளார், இது நியாயம் இல்லாத குற்றச்சாட்டு, உண்மையான விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மிளகாய் வத்தல், 12 டன் கொள்முதல் செய்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் அனுப்பி உள்ளோம், மேலே இருக்கின்ற 100 கிலோ வத்தல் சோடையாக இருக்கிறது என, எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவரிடம் விளக்கம் கேட்காமல் தன்னிச்சையாக எடுத்தேன் கவுத்தேன் என பணிநீக்கம் செய்துள்ளார், நாங்கள் கேள்வி கேட்டதற்கு தகுதி நீக்கம் செய்வதற்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறார், 

பதவி ஏற்பு பட்டியலை வாங்கிக் கொண்டு கிடப்பில் போட்டு உள்ளார், சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவற்றை வழங்க மறுக்கிறார், அரசாணையில் உள்ள விதிகளுக்கு மாறாக இவர் செயல்படுகிறார், 

*ஒரு சில அதிகாரிகள் இங்கு குறுநில மன்னர்களாக செயல்படுகிறார்கள்*

துறையைப் பற்றி தவறான புரிதலுடன் இங்கு வந்திருக்கிறார், (பதிவாளர் லதா)இவர் பல்வேறு ஊழியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் அழுத்தம் கொடுக்கிறார், சில காலமாக அனைத்து சங்கங்களும் முடங்கியுள்ளது எந்த வேலையும் நடைபெறவில்லை, இதனை கண்டித்து தான் தற்போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம், 

*இதற்கு முன் இருந்தவர் துறையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றார் தற்போது துறை முடங்கி கிடக்கிறது*

நாளை நாங்கள் அவரை சந்திக்க இருக்கிறோம் எங்களின் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் அறிவிக்க இருக்கிறோம் என தெரிவித்தார்……

District News