
எஸ்.ஆர்.எம்- இல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 80வது நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி துவக்கவிழா நிகழ்ச்சி காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் பாரிவேந்தர் அக்வாடிக் வளாகத்தில் நடைபெற்றது.
தமிழகத்தின் முன்னணி நீச்சல் வீரர்கள் – வீராங்கனைகள் கலந்து கொள்ளும்
இந்த நீச்சல் போட்டியில்தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நீச்சல் சங்கம் இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்திய நீச்சல் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க அங்கீகாரத்துடன் நடைபெறும் இப்போட்டியில், மாநிலம் முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங் கேற்கின்றனர்.
மேலும், இந்தாண்டிற்கான 12வது ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வுப் போட்டியாகவும் இது விளங்கும்.

