வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமசந்திரன் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமசந்திரன் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்.., 
வடகிழக்கு பருவ மழை நேற்று 10.11.இரவு மற்றும் இன்று கடலூர் விழுப்புரம் சென்னை திருவள்ளுர் மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நெல் பயிர் சேதங்களை உடனடியாக கணக்கிட உத்தரவிடபட்டுள்ளது.
தமிழகத்தில் 90 நீர்தேக்கங்களில் 53 நீர் தேக்கங்களில் 76 சதவிகிதத்திற்கு மேலாக நிரம்பி உள்ளது.
14138 ஏரிகளில் 9153 ஏரிகள் 50 சாத்வீத்திற்கு மேலாக நிரம்பியுள்ளன.இவற்றுள் 3691 ஏரிகள் 100 சதவிகிததிற்கு மேலாக நிரம்பி உள்ளது.
424  கடலோர பகுதிகளில் எச்சரிக்கை அலாரம் பொறுத்தபட்டுள்ளது.
வங்க கடலில் மீன் பிடிக்க சென்ற 33773 படகுகள் அனைத்தும் பத்திரமாக கரை சேர்ந்துள்ளன.
மழை நீர் தேங்கி உள்ள 400 பகுதிகளில் 240 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் இராட்சத பாம்புகள் மூலம் அகற்றப்பட்டது. எஞ்சிய 160 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
19547 நீச்சல் தெரிந்தவர்கள் 15912 மரம் அறுக்க தெரிந்தவர்கள் 3117 பாம்பு பிடிக்க தெரிந்தவர்.  கால்நடை பாதுகாப்பிற்காக 19535 பேர் என 105000  தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
எதிர்காலத்தில் இது போன்ற சூழல் இல்லாத நிலையை உருவாக்குவோம்
நேற்று மட்டும் திருவாரூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்கில் மொத்தம் 3பேர் இறந்துள்ளனர். 94 கால்நடை இறந்துள்ளனர்950 குடிசை வீடுகள் இடிந்துள்ளது.
16 சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில் 15 சுரங்க பாதையில் வெள்ள நீர் அகற்றப்பட்டது.
தேசிய பேரிடர் படையினர் கூடுதலாக தேவை பட்டால் பயன்படுத்த தயாராக இருக்கிறோம்.
கடற்கரையோர மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

District News