தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

கடந்த 24 மணி நேரத்தில்,அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 130.64மிமீ மழையும். 38 மாவட்டங்களில் 21.02 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மழையின் காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்களில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செங்குன்றத்தில் இருந்து 3000 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 2151 கன அடியும், பூண்டியில் இருந்து 6 ஆயிரம் கனஅடி, சோழவரத்தில் 2015 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழையின் அளவை பொருத்து உபரி நீர் வெளியேற்றப்படுவது முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்திற்குள் 40 முதல் 45 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு சார்பாக அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 157 கால்நடைகள் இறப்பு பதிவாகியுள்ளதாகவும்,1072 குடிசைகள் பாதித்துள்ளது, 233 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொடர் மழை காரணமாக வெளியில் வர இயலாத நிலையில் பொது மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய ஒருவர் வீதம் 200 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .

District News