இன்சுலினின் மறக்கப்பட்ட வரலாறு: பிரபல நீரிழிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர். வி. மோகன் எழுதிய புத்தகம் வெளியீடு

இன்சுலினின் மறக்கப்பட்ட வரலாறு: பிரபல நீரிழிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர். வி. மோகன் எழுதிய புத்தகம் வெளியீடு

Banting, Bose and Beyond’ என்ற தலைப்பிலான இப்புத்தகம், தளராத நம்பிக்கையோடு நீரிழிவை எதிர்த்துப் போராடி வருகின்ற வயது வந்த நபர்கள் மற்றும் குழந்தைகளின் நிஜ வாழ்க்கை கதைகளையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்து விவரிக்கிறது  

சென்னை, 30 மே 2022: பல இளம் இந்தியர்களுக்கு முதலாம் வகை நீரிழிவு நோய் இருக்கும் நிலையில் இன்றைய காலகட்டத்தில் உயிர்காக்கும் சிகிச்சையாக இன்சுலின் கருதப்படுகிறது.  முதலாம் வகை நீரிழிவால் அவதிப்படுபவர்களுக்கு இன்சுலினைத் தவிர்த்து வேறு ஏதும் மருந்து இப்போது இல்லை.  இன்சுலின் கண்டறியப்பட்ட வரலாறில் தொடங்கி, இந்தியாவிற்கு அது வந்து சேர்ந்த விதம் மற்றும் அது காப்பாற்றியிருக்கின்ற எண்ணற்ற நபர்களது வாழ்க்கைக்கதைகள் வரை இதுகுறித்த வியப்பூட்டும் செய்திகளின் தொகுப்பாக டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரும், அதன் தலைமை நீரிழிவு மருத்துவருமான டாக்டர். வி. மோகன், ‘பேண்டிங், போஸ் அண்டு பியாண்டு’: “இந்தியாவில் இன்சுலின் எவ்வாறு எண்ணற்றோரின் வாழ்க்கையை மாற்றியது என்பதற்கான ஊக்கமளிக்கும் கதைகள்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பான புத்தகத்தை எழுதியிருக்கிறார்.  அவர் சமீபத்தில் எழுதிய இப்புத்தகத்தின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் டாக்டர். J.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இப்புத்தகத்தை வெளியிட்டார்.

Launch