சமூகநீதி பேரவை சார்பில் 2022ஆம் ஆண்டு செயல் விளக்க மாநாடு மற்றும் கொரோனா காலத்தில் சமூக சேவையில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்கள் சேவகர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா

சென்னை YMCA அரங்கில் சமூக நீதிப் பேரவையின் மாநிலத் தலைவர் பால்ராஜ் குணா தலைமையில் தலைமை ஒருங்கிணைப்பாளர்பாபு மயிலன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் எழும்பூர் பகுதி திமுக செயலாளர் சுதாகர், பாரதிய ஜனதா கட்சியின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் குட்டி தயாளன், உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்தனர்.

இதில் சமூக நீதிப் பேரவை யின் பொதுச் செயலாளர் கிங் சாமுவேல் ரவி, முதன்மைச் செயலாளர் முனைவர் ஜோஸ்வா, தலைமை நிலைய செயலாளர் டானியல், துணைத்தலைவர் வீரேஸ் ஜேம்ஸ், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் அற்புதராஜ், மாநில இணைச் செயலாளர் சிவனேசன் உள்ளிட்ட மாவட்ட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

District News