இதயம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய சென்னையில் முதல் செயற்கை நுண்ணறிவு ‘கேத் ஆய்வகம் குமரன் மருத்துவமனை ரேலா இன்ஸ்டிடியூட் இணைந்து துவக்கம்

இதயம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிய சென்னையில் முதல் செயற்கை நுண்ணறிவு ‘கேத் ஆய்வகம் குமரன் மருத்துவமனை ரேலா இன்ஸ்டிடியூட் இணைந்து துவக்கம்

தமிழகத்தில் முதல் முறையாக ரத்த நாளம், நரம்பு செயல்பாடுகள், புற்றுநோய் சிகிச்சைக்கு ஆட்டோ ரைட்டின் ‘இன்னோவா ஐஜிஎஸ் 5’ கருவி அறிமுகம்

சென்னை, மார்ச் 4 : தமிழகத்தில் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேத் ஆய்வகத்தை குமரன் மருத்துவமனை மற்றும் ரேலா இன்ஸ்டிடியூட் ஆகியவை இணைந்து இன்று சென்னையில் அறிமுகப்படுத்தின. இந்த ஆய்வகத்தை ரேலா மருத்துவமனை தலைவர் பேராசிரியர் முகமது ரேலா முன்னிலையில் ரவி அப்பாசாமி மற்றும் டாக்டர் ஐசரி கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேம்பட்ட காட்சிப்படுத்தல் மற்றும் பல்நோக்கு பயன்பாடுகளுடன் ஆட்டோ ரைட்டின் இன்னோவா ஐஜிஎஸ் 5 கருவியானது, ரத்த நாளங்கள், மென்மையான திசுக்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை கண்டறிய உதவும்.

இது குறித்து ரேலா மருத்துவமனை தலைவர் பேராசிரியர் முகமது ரேலா கூறுகையில், இது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும். இது மருத்துவர்கள் தங்கள் வேலைகளில் மிகத் துல்லியமாக செயல்பட உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பத்தை சென்னை குமரன் மருத்துவமனையில் வழங்குவதில் நான் தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சென்னையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு கேத் ஆய்வகம் உண்மையில் மருத்துவர்களுக்கு கூடுதல் கண்களைப் போன்று செயல்படும்.

இது குறித்து குமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவா கூறுகையில், ஜிஇ நிறுவனத்தின் ஆட்டோ ரைட் இன்னோவா ஐஜிஎஸ் 5 கருவியானது செயற்கை நுண்ணறிவு கொண்ட தமிழகத்தின் முதல் கருவியாகும். மேலும் இது சிடி ஸ்கேன் உள்ளிட்ட சாப்ட்வேர்களையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாத சிகிச்சைகளை வழங்க முடியும்.

Health