

சுன்னத்ஜமாஅத் கூட்டமைப்பு
பெண்கள் சுய பாதுகாப்புக்காக அணியும் ஹிஜாப் எனும் ஆடைக்கு தடை செய்யும் பள்ளி மற்றும் கல்லூரிகளை கண்டித்து ஆர்பாட்டம்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் சுய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு அணிந்து வரும் ஹிஜாப் எனும் ஆடைக்கு பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் தடை வித்தததால் கர்நாடக மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதோடு இது ஒரு சர்வதேச பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது என்பதை தாங்கள் அறவீர்கள் என்று நம்புகின்றோம். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் கர்நாடகா முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எனவே சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக 4 .3. 2022 அன்று மதியம் 2.30 மணியளவில் சென்னை அண்ணாசாலை மக்கா மஸ்ஜித் அருகில் ஹிஜாப் ஆடைக்கு ஆதரவாகவும் , ஹிஜாபுக்கு தடை செய்யும் பள்ளி மற்றும் கல்லூரிகளைக் கண்டித்தும் , ஹிஜாபை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் கும்பலின் அராஜகப் போக்கை தடுத்து நிறுத்தாத பா.ஜ.க அரசுகளைக் கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.