சென்னை எண்ணூர் அசோக் லைலேண்ட் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எண்ணூர் அசோக் லைலேண்ட் தொழிற்சாலையில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை எண்ணூரில் உள்ள
அசோக் லைலேண்ட் தொழிற்சாலையில்
கடந்த 2015இல் போடப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2018இல் காலாவதியாகிவிட்டது. அந்த ஒப்பந்தம் முடிவடைந்து மூன்று வருடம் ஆகிவிட்டது என கூறப்படுகிறது.

அன்று முதல் இன்று வரை பேச்சுவார்த்தை மூலம் சரியான முடிவைத் தொழிலாளர்கள் நிறுவனத்துடன் எடுக்க முடியவில்லை. கொரோனா நோய்த் தொற்று காலங்களில் கூட உற்பத்தி அதன் முழு கொள்ளளவை எட்டியது. நிர்வாகம் உடனடியாக ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பைட்: தனுஷ்கோடி -செயலாளர் எண்ணூர் ஃபவுண்டரிஸ்

ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2018 இல் காலாவதியாகிவிட்டது. அந்த ஒப்பந்தம் முடிவடைந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஊதிய உயர்வு கொடுக்கவில்லை. நிர்வாகம் முறையாக பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வு இது போல் இருக்கும் சூழ்நிலையில் தொழிலாளர்கள் குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். அதனால் நிறுவனம் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

District News Uncategorized