பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 49 வது ஆண்டுப் பெருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ம் தேதி புதன்க்கிழமை அன்னையின் பிறப்பு பெருவிழா அன்று நிறைவுபெறும் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கொரோனா தோற்று நோய் பேரிடரின் காரணமாக மக்கள் பங்கேற்பு இல்லாத கொடியேற்றத் திருநிகழ்வாகக் கொண்டாடப்படும். எனவே நடைபயணமாக பக்தர்கள் யாரும் ஆலயத்திற்கு வரவோ கொடியேற்றத்தில் பங்கேற்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று அன்போடும் பணிவோடும் கேட்டுக்கொள்கிறேன்.
29 ஆம் தேதி மாலை 5.45 ,மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அன்னையின் திருக் கொடியை ஏற்றி வைப்பார்கள் . அதனைத் தொடர்ந்து வருகிற நிகழ்வுகளும் நவநாள் வழிபாட்டு நிகழ்வுகளும் மாதா தொலைக்காட்சியிலும் , FACE BOOK , YOUTUBE போன்ற பிற சமூக ஊடகங்கள் வழியாகவும் நேரலையாக ஒளிபரப்பப்படும். எனவே உங்கள் வீடுகளிலிருந்தே நேரலையாக ஒளிபரப்பப்படுகின்ற கொடியேற்றம் மற்றும் ஆண்டுப் பெருவிழா திருநிகழ்வுகளில் கலந்து கொள்ள உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஆண்டுப்பெருவிழர் பொதுமக்கள் , பக்தர்கள் பங்கேற்பின்றி ஆலயத்திற்கு உள்ளே நடைபெறும் : அன்னையின் திருக்கொடி பவனி , நற்கருணைப் பவனி , தேர்பவனி ஆகிய அனைத்தும் ஆலய வளாகத்திற்கு உள்ளேயே நடைபெறும் , அரசு அறிவித்துள்ளபடி வெள்ளி , சனி , ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் திருத்தலத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் . காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இல்லாமல் இங்கே வந்து ஏமாந்து போகாமல் தயவு செய்து உங்கள் இல்லங்களிலிருந்து அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா தொற்றுநோய் அன்னையின் அருளால் விரைவில் நீங்கவும் , நம்முடைய இந்திய நாடும் அனைத்துலக மக்களும் இந்த தொற்று நோயின் பிடியில் இருந்து மீளவும் சிறப்பாக பிரார்த்தனை செய்யுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் வேண்டுதல்கள் உங்களது கருத்துக்கள் ஆகிய அனைத்தும் நிறைவேற நாங்கள் 29. ஆம் தேதி கொடியேற்றும் முதல் 8-ம் தேதி அன்னையின் பிறப்புப் பெருவிழா வரை ஒவ்வொரு நாளும் உங்களுக்காக அன்னையின் திருப்பாதத்திற்கு முன் பிரார்த்திப்போம் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுடைய முழு ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. அன்னை வேளாங்கண்ணித் தாய் உங்களையும், உங்கள் குடும்பங்களையும், நமது நாட்டையும் நிறைவாக ஆசீர்வதிக்க உங்களுக்காக பிராத்தனை செய்கின்றேன்.
அருட்திரு.வின்சென்ட் சின்னதுரை
ஆதிபர் மற்றும் பங்குத்தந்தை
அன்னை வேளாங்கண்ணி திருத்தலம்
பெசன்ட் நகர். சென்னை