எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சென்னை எழும்பூரில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சென்னை எழும்பூரில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கோடு சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருவதாக எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சென்னை எழும்பூரில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் தெரிவித்தார்

எழும்பூர் தொகுதி டான்பாஸ்கோ பள்ளியில் நாளை இன்று 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் போடும் (mega vacations camp) நிகழ்ச்சியை எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,

சென்னை மாநகராட்சி முழுவதும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னை மாநகராட்சி முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டு எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட டான்போஸ்கோ பள்ளியில் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டு இருப்பதாகவும்.. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஒரு லட்சம் தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் இதற்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி வரத்து குறித்து தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி வருவதாகவும் இதற்கு முன்பு அரசின் சார்பாக முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது ஆனால் தற்பொழுது மக்கள் இரண்டாவது தவணை போட்டுக்கொள்ள அந்தந்த பகுதியில் உள்ள முறையான தடுப்பூசி நிலையங்களில் போட்டுக்கொள்ள மக்கள் சென்றாலும் மக்களிடையே ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்த இது போன்ற முகாம்கள் சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Health