ஜெம் மருத்துவமனையின் “கருத்தரிப்பு மருத்துவ துறை மற்றும் ஒருங்கிணைந்த மகளிர் மையத்தை” மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் திறந்து வைத்தார்

ஜெம் மருத்துவமனையின் “கருத்தரிப்பு மருத்துவ துறை மற்றும் ஒருங்கிணைந்த மகளிர் மையத்தை” மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் திறந்து வைத்தார்


சென்னை, 28 ஆகஸ்ட் 2021: சென்னை ஜெம் மருத்துவமனையில் ‘கருத்தரிப்பு மருத்துவ துறை மற்றும் ஒருங்கிணைந்த மகளிர் மையத்தை’ மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கி வைத்தார். இது பெண்கள் மருத்துவக் குழு தலைமையிலான பெண்களுக்கான சிறப்பு மையமாகும். கெளரவ விருந்தினர் பேராசிரியர் டாக்டர் பர்வீன் சுல்தானா தனது உத்வேகமூட்டும் உரையால் கூட்டத்தை செம்மைப்படுத்தினார்.

திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், பெண்களுக்கான சிறப்பு பராமரிப்பு மையத்தைத் திறந்து, சிறந்த சுகாதார சேவைகளை வழங்கி வரும் ஜெம் மருத்துவர்களை வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.சி.பழனிவேலு பேசுகையில், “இன்சிஷனல் ஹெர்னியா, உடல் பருமன், கோலிசிஸ்டிடிஸ், சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று, பெல்விக் அல்சர், மார்பக புற்றுநோய், கர்ப்பவாய்ப் புற்றுநோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் பெண்களிடையே மிகவும் பொதுவானவை. பல பெண்கள் சமூகத்தின் மீதான பயத்தினால் அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றி பேசவோ, ஒரு நிபுணரை அணுகவோ தயங்குகிறார்கள். ஜெம் மருத்துவமனை ஒரு நோயாளி மற்றும் மருத்துவர் உறவுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க விரும்புகிறது. எனவே ‘கருத்தரிப்பு மருத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த மகளிர் மையத்தை’ திறந்துள்ளது.

Health