சென்னை புளியந்தோப்பு பகுதியில் சிவசேனா கட்சி சார்பில் பல கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர்.இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் திமுக ஆட்சியில் முதல் 100 நாள்கள் சிறப்பாகவே செயல்பட்டு இருப்பதை சிவசேனா கட்சி பாராட்டுகிறது என்று கூறினார்
இந்து சமய அறநிலைத்துறை சிறப்பாக செயல்படுகிறது கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்கவும் கோவில் சொத்துக்களில் வியாபாரங்களை முறையை படுத்துவதிலும் கோவில் பணிக்கு அலுவலகங்களுக்கு ஊழியர்களை நியமன படுத்துவதிலும் அறநிலைய ஆட்சித்துறை பாராட்டத்தக்க வகையில் பணி செய்து வருகிறது என்று பாராட்டினார்.
கொரோனா கட்டுப்பாடுகளை கடை பிடித்து சிவசேனா கட்சி சார்பில் தமிழகத்தில் 10,000 விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி நடைபெறும்.
பெண்களுக்கு எங்கெல்லாம் பாலியல் தொல்லை நடக்கிறதோ அங்கெல்லாம் சிவசேனா கேள்வி எழுப்பும் என்று கூறினார்.
பாஜக தேடித்தேடி சமூக விரோதிகளை தலைவராக ஆக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினர்.
மக்களுக்கு சேவை வழங்குவதை பாஜக ஒரு நாளும் செய்வதில்லை.
தமிழகத்தில் ஹிந்து மகா சேவையாக சிவசேனை கட்சியை நாங்கள் செய்வோம் என்று கூறினார.
பாஜக பெண்களை தாயாக மதிக்கிறோம் என்று கூறி வாக்குக் கேட்டார்கள் ஆனால் இப்பொழுது அவர்களை பாலியல் தொல்லை செய்பவர்கள் ஆக இருக்கிறார்கள் அதனால் அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டு செய்ய வேண்டும்.
அண்ணாமலை அவர்கள் பெண்கள் மதிக்கத்தக்க கட்சியாக பாஜக இருக்க வேண்டும் என்றால் அவர்தான் இந்தப் பாலியல் வழக்கில் முன் எடுக்க வேண்டும்.
கோயிலில் பூஜை செய்வதற்கு அனைத்து சாதிகளில் இருக்கும் மக்கள் பூஜை செய்ய வேண்டும்.
அனைத்து ஜாதிகளிலும் மாபெரும் தலைவர்கள் இருக்கிறார்கள் அதனால் இந்த ஜாதியைம் ஒதுக்கக் கூடாது .நாம் அனைவரும் ஹிந்துக்கள் அதனால் நமக்குள் சாதி பார்க்கக் கூடாது என்று கூறினார்.
அரசு தடைகளை விதித்து இந்து வழிபாட்டு உரிமைகளை பறிப்பது ஏற்கமாட்டோம் .விநாயகர் சதுர்த்தி விழாவை சிவசேனா சார்பில் கட்டுப்பாட்டுடன் நடத்துவோம் என்று கூறினார்.