மிஸ்டர் வேர்ல்டு 2017 &2018 பட்டங்களை வென்ற டோனீஸ் ஃபிட்னஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர். மணிகண்டன்,

மிஸ்டர் வேர்ல்டு 2017 & 2018 பட்டங்களை வென்ற
டோனீஸ் ஃபிட்னஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி
ஆர். மணிகண்டன், அக்டோபர் 1- 7 வரை உஸ்பெகிஸ்தான் டாஷ்கண்டில் நடைபெற உள்ள 12வது WBPF உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளார்

சர்வதேச அரங்கில் 3வது முறையாக இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கும் ஒரே பாடி பில்டர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் திரு. மணிகண்டன்

ஆர்.மணிகண்டன் பற்றி

ஃபிட்னஸ் சார்ந்து இயங்குபவர், இரண்டு முறை மிஸ்டர்.வேர்ல்டு பட்டம் வென்றவர், நன்கொடையாளர், செலப்ரிட்டி பயிற்சியாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் ஆர். மணிகண்டன். டோனீஸ் உடற்பயிற்சி மையம் மற்றும் டோனீஸ் வெல்னஸ் அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இயங்கி வருகிறார். தளம் அமைத்து கொடுக்க பின்புலம் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மணிகண்டன், பல நாட்கள் உணவும் பணமும் இன்றி வெறும் உழைப்பை மட்டுமே நம்பி முன்னேறியவர். ஃபிட்னஸ் துறையில் சாதிக்கும் முனைப்போடு உழைத்தவர்.
இது குறித்து மணி பேசும்போது “எனக்கு ஆரோக்கியமான உடலமைப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, நல்ல மனிதர்கள் என்னைச் சுற்று உள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு பெற்று உடற்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக, ஃபிட்னஸ் துறையில் புதிய மாற்றங்களை உருவாக்க முயற்சித்து வருகின்றேன். ஒவ்வொரு பாடி பில்டரின் வலி என்ன என்பதை நான் அறிவேன். இந்தியாவுக்காக சர்வதேச அரங்கங்களில் பங்கேற்றிருந்தாலும், நமக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்காமல் உள்ளது” என்றார்

4 லட்சத்துக்கும் அதிகமான தானம் அளிப்பவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ‘ப்ளட் ஸ்டெம் செல்’ தானம் தரும் அமைப்பான DATRI-ன் தூதுவராக மணி இயங்கி வருகிறார். இந்த அமைப்பு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறார்கள், வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பையும் தருகிறார்கள். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை இறப்பில் இருந்து காக்க, இது போன்ற ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய திரு. மணி, “DATRI-ன் நல்லெண்ணத் தூதராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களது பணியை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன். பலரது வாழ்வை மாற்றும் இந்த பணியை திறம்பட செய்ய எதிர்நோக்கி உள்ளேன்.” என்கிறார்

ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள மணி, அடுத்து திரைத்துறையின் மிக முக்கிய பிரபலங்களுடன் நடிக்க முயற்சி செய்து வருகிறார். தற்போது, உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள மிஸ்டர் வேர்ல்ட் சாம்பியன்ஷிப்பிற்கு அவர் தயாராகி வரும் நிலையில், அதில் முழு கவனம் செலுத்த உள்ளார். அதே நேரத்தில் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்வதையும் தொடர்ந்து வருகிறார். தனிப்பட்ட முறையில் வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல என்றும், விளையாட்டின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து விளையாடி ஃபிட்னஸ் துறைக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய இருக்கிறார் அவர். இதுவே, உண்மையான வெற்றி என நெகிழ்ச்சி அடைகிறார் மணி.

District News