தனியார் குடியிருப்பில் வாழும் முதியவர்களுக்கு புதிய கிளப் ஹவுஸை எம்.பி. எம்எல்ஏ திறப்பு.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ஆஷியானா சுபம் என்ற அபார்ட்மெண்ட்டில் முதியவர்கள் மட்டும் சுமார் 200குடும்பங்கள் பிள்ளைகளை விட்டு தன்னந்தனியாக சொகுசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகள் அமெரிக்கா லண்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா என பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்திலையில் இவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கேற்ப அபார்ட்மெண்ட் நுழைவாயிலில் 24 மணிநேரமும் முழு பாதுகாப்பு வசதி, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, மேலும் அழகிய வடிவமைப்பில் பூங்காவசதிகள் என எந்த குறையும் இல்லாமல் கூப்பிட்ட குரளுக்கு ஓடோடிவர பணியாட்கள் அதோடு மட்டுமல்லாமல் காலை,மதியம் டீ, காபி மற்றும் காலை,இரவு டிபன் மதியம் சாப்பாடு என அனைத்திற்கும் சேர்த்து 170 ரூபாயில் மூன்று வேலை வழங்குவதற்கான கேன்டீன் வசதியுடன் அமைக்கப் பட்டுள்ளது.

தங்களது
பிள்ளைகள் அருகில் இல்லாத குறையை தவிர அனைத்து முதியவர்களும் ஆரோக்யத்துடனும் மிகவும் மகிழ்ச்சியுடனும் 200 குடும்பங்களும் சாதி மதமின்றி அனைவருமே உறவினர்கள் போல வாழ்ந்து வரக்கூடிய நிலையில் இந்த அபார்ட்மெண்ட்டில் மேலும் நிம்மதியாக பொழுது போக்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் புதிய கிளப்ஹவுஸ் அமைத்து அந்த கிளப்ஹவுஸ் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று குத்துவிளக்கேற்றி ரிப்பன்வெட்டி கிளப்ஹவுஸை திறந்து வைத்தனர். மேலும் இவ்விழாவில் அர்ஜீனா அவார்டு மற்றும் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன், சினிமா பின்னனி பாடகி கிர்த்திகாபாபு ஆகியோர் பங்கேற்றனர். அந்த முதியவர்களில் சிலர் பாட்டுப்பாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர், பின்னனி பாடகி கிர்த்திகாபாபு சினிமா பாடல்களை பாடி முதியவர்களை உற்சாகப் படுத்தினார். ஆஷியானா சுபம் அப்பார்ட்மென்ட்டில் வசிக்கக்கூடிய 200 குடும்ப முதியவர்களும் தங்களது குடும்ப விழாவில் பங்கேற்பது போல் இவ்விழாவில் பங்கேற்றனர்.

Launch Uncategorized