கலர் கட்டும் கேம்பெய்ன் இன் ஒரு பகுதியாக பிரைம்-டைம்-ல் இரு புத்தம் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியது கலர்ஸ் தமிழ்

கலர் கட்டும் கேம்பெய்ன் இன் ஒரு பகுதியாக பிரைம்-டைம்-ல் இரு புத்தம் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியது கலர்ஸ் தமிழ்


தமிழ் பொது பொழுதுபோக்கு தொலைக்காட்சி தளத்தில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவரும் சேனல் என்ற புகழ் பெற்றிருக்கும் வயாகாம் (VIACOM) 18-ன் கலர்ஸ் தமிழ், புத்துணர்வூட்டும் ‘கலர் கட்டும்’ செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரைம் டைம்-ல் டான்ஸ் vs டான்ஸ் 2 மற்றும் எங்க வீட்டு மீனாட்சி ஆகிய இரு புதிய நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதை இன்று அறிவித்திருக்கிறது. அக்டோபர் 17ம் தேதியன்று ஆரம்பமாகும். டான்ஸ் vs டான்ஸ் 2 என்பது இச்சேனலின் பிரபல டான்ஸ் ரியால்டி நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 7:30 மணிக்கு இது ஒளிபரப்பாகும். இது மட்டுமன்றி, மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய எங்க வீட்டு மீனாட்சி, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு அக்டோபர் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. ‘இனி தினம் தினம் கலர் கட்டும்’ என்ற தனது புதிய கேம்பெய்ன் மூலம் அதிக தாக்கம் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் வழியாக பெண்களையும் மற்றும் அவர்கள் குடும்பங்களையும் கொண்டாடுகிற வலுவான கதைகளை மக்களுக்கு வழங்குவதை இந்த சேனல் தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பார்வையாளர்களின் தற்காலத்தைய மற்றும் நடப்பு ஆர்வங்களோடு ஒத்திசைவு கொண்டதாக இந்நிகழ்ச்சிகள் இருக்கும்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. ராஜாராம், “கலர் கட்டும் என்ற எமது கருத்தியலுக்கு ஏற்றவாறு புதுமையான கதைக்களம், கதாபாத்திரங்கள் மற்றும் முற்றிலும் புதிய வடிவம் ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்த குடும்பங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த கலர்ஸ் தமிழ் பெரு விருப்பமும், உறுதியும் கொண்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் அளிக்கிற முற்போக்கான கருத்துகளை காட்சிப்படுத்துகிற அதே வேளையில், காலம் காலமாக இருந்துவருகிற தவறான புனைவுகளை உடைப்பதிலும் இந்த சேனல் எப்போதும் தீவிர ஆர்வத்தோடு இயங்கிவந்திருக்கிறது. பெண்களின் மாறுபட்ட பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுவதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. டான்ஸ் vs டான்ஸ் 2 நிகழ்ச்சி பற்றி கூறுவதென்றால், திறன் மிக்க பிரபல நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் ஆகியோரை டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்க செய்திருக்கிறோம். அதுபோலவே ரசிகர்களின் மனங்கவர்ந்த ஜீவா, ஶ்ரீத்தா சிவதாஸ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் எங்க வீட்டு மீனாட்சியில் முக்கிய கதாபாத்திரங்களாக இடம்பெறுகின்றனர். பிரைம் டைம் என கருதப்படும் பின் மாலைப்பொழுதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் செய்யப்பட்டிருக்கிற இந்த மாற்றமும் மற்றும் புதிதாக தொடங்கப்படுகிற இந்த இரு நிகழ்ச்சிகளும், இன்னும் துரிதமான முன்னேற்றத்தை நோக்கிய எமது பயணத்தை மேலும் ஊக்குவிக்கும் மற்றும் முன்னெடுத்துச் செல்லும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.

Launch