மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 82 லட்சம் மோசடி

மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 82 லட்சம் மோசடி

*மின் பொறியாளர் வீட்டின் வாயிலில் தாய் மற்றும் மகன் தர்ணா போராட்டம்

  • காவல்துறையினர் விஜிலென்ஸ் உள்ளிட்டோர் கைவிட்ட நிலையில் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க பேட்டி*

சென்னை தண்டையார்பேட்டை இரட்டைகுழி தெருவில் வசிக்கும் பட்டதாரி இளைஞர் சுரேஷ்குமார் இவர் வங்கியில் பணிபுரிந்து வந்த நிலையில் திருவொற்றியூரில் உள்ள தேவாலயத்தில் அறிமுகமான பாபு என்பவர் தாம் வடச்சென்னை அனல்மின் நிலையத்தில் உதவி இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும் வங்கி வேலையெல்லாம் இழுத்து மூடி விடுவார்கள் என்றும் வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிரந்தர பணியில் வேலை காலியிடங்கள் இருப்பதாகவும் உடனடியாக வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அதற்கு 42 லட்சம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக நிரந்தர பணியில் அமர்த்துவதாக தெரிவித்ததை யடுத்து அரசு வேலைக்கு ஆசைப்பட்ட சுரேஷ் தமது தாயின் நகை மற்றும் உறவினர்களிடம் கடனுக்கு பணம் வாங்கி 40 லட்சத்தை செலுத்தி உள்ளதாகவும் சுரேஷ் தெரிவித்தார்

பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு மின்வாரியத்தில் வேலை கிடைக்க தாமதமானதையடுத்து பாபுவை அணுகிய சுரேஷ் தமது 40 லட்சம் பணத்தை திருப்பி அளிக்குமாறு கேட்டுள்ளார் மின்வாரியத்தில் பணி அமர்த்த இன்னும் சில நாட்க்கள் ஆகாலம் என்றும் ஆகையால் இருவரும் ஒன்றிணைந்து ஸ்கிராப் பிசினஸ் செய்தால் நமக்கு நிறைய லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி சுரேஷிடம் கூடுதலாக 42 லட்சம் கேட்டுள்ளார்

இதனையடுத்து மின்வாரியத்தில் வேலை கிடைத்துவிடும் என்ற ஆசையிலும் மற்றும் ஸ்கிராப் பிசினஸில் பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையினால் கூடுதலாக 42 லட்சம் ரூபாய் பணத்தை பாபுவிடம் கடந்த 2016 – 2017 ஆகிய ஆண்டுகளில் பத்து லட்சம் 20 லட்சம் என்று மொத்தம் 82 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது

இதனையடுத்து பணமும் வேலையும் கிடைக்காத விரக்தியில் சுரேஷ் தலைமறைவான பாபுவை தேடிக் கொண்டிருந்த நிலையில் அடுத்தடுத்து வீடுகளுக்கு மாறிக்கொண்டிருந்த பாபு எர்ணாவூர் கேட் அருகே ஒரு வீட்டில் பாபு அவரது மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்டோருடன் வசிப்பது தெரியவந்ததை அடுத்து

இன்று காலை தனது தாயுடன் சென்று பணம் கேட்ட நிலையில் பாபு பணம் தர முடியாது என்று விரட்டியதை அடுத்து ஆத்திரமடைந்த சுரேஷ் தமது தாயுடன் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து எண்ணூர் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷ் மற்றும் அவரது தாய் செல்வி மற்றும் பாபுவின் மனைவி மாமனார் உள்ளிட்டோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

District News