ராயபுரத்தில் உள்ள ஜிகே ஜெயின் பள்ளியில் ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் அவர்களின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ராசி இடைவிடாமல் 75 நிமிடம் 75 நொடிகள் இடைவிடாது தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி சாதனை புரிந்துள்ளார் இந்த சாதனையை யுனைட்டட் கலாம் புத்தக நிறுவனம் சார்பில் உலக சாதனை புரிந்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் கோப்பை வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஸ்ரீபால் கோத்தாரி ஐநா பாதுகாப்பு அமைப்பின் தேசிய செயலாளர் தினேஷ் அஸ்வின் மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குனர் டாக்டர் செந்தூர் பாண்டியன் மாணவியின் தந்தை சரவணன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்துகொண்டு மாணவியை பாராட்டினார்
மறைந்த ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அவர்கள் பள்ளி மாணவர்கள் கனவு காணுங்கள் விழிப்போடு இருங்கள் சாதனை படையுங்கள் என்று மாணவர்களுக்கு தமது பேச்சால் ஊக்கப்படுத்திய பேச்சினால் தாமும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரதநாட்டியத்தில் இதுபோன்ற சாதனையில் ஈடுபட்ட தாகவும் மாணவி ராசி தெரிவித்தார். .