சென்னை அக்டோபர் 30,
திருவொற்றியூர் தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்களும் மாணவர்களும் பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட அலுவலர் வடக்கு ராஜேஷ்கண்ணா அறிவுரையின்படி, திருவொற்றியூர் நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் வாசுதேவன் ஆகியோர் விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை வைத்து தீபாவளி பண்டிகையின்போது மாணவிகள் பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதற்கும் தீ விபத்து ஏற்படாமல் பட்டாசு வெடிக்கவும் 500க்கும் மேற்பட்ட
மாணவிகளுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீபாவளியின்போது பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் தலைமையாசிரியர் பஞ்சநாதன், ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு அவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததாக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தெரிவித்தனர்.